செரி பேட்டன்ட் பெற்றுள்ள மூன்றாவது மற்றும் மிகவும் மிரட்டலான மாடல், எக்ஸீட் எக்ஸ்லாண்டிக்ஸ் ES7 GT. இது ஒரு ஷூட்டிங் பிரேக் ஸ்டேஷன் வேகன் ரக கார். அதிக செயல்திறனை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 1000V EV ஆர்க்கிடெக்சர் மற்றும் மூன்று மோட்டார் சிஸ்டம் உள்ளது. 0-விலிருந்து 100 கி.மீ வேகத்தை வெறும் 3 வினாடிகளில் எட்டிவிடும் என்பது இதன் சிறப்பம்சம். இதில் 41 kWh பேட்டரியும், 1.5 லிட்டர் ரேஞ்ச் எக்ஸ்டெண்டர் பெட்ரோல் இன்ஜினும் உள்ளன. பேட்டரி ஃபுல் சார்ஜ் மற்றும் பெட்ரோல் டேங்க் ஃபுல்லாக இருந்தால், சுமார் 1,700 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என்று நிறுவனம் கூறுகிறது.
சொகுசு அம்சங்களுடன் இந்திய சந்தையை குறிவைக்கும் செரி
செரியின் இந்த பேட்டன்ட் பதிவுகள், இந்தியாவில் பிரீமியம் கார்களை அறிமுகப்படுத்தும் திட்டத்தை காட்டுகிறது. இந்த கார்களில் லெதர் இன்டீரியர், 15.6 இன்ச் மெயின் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன், 12.3 இன்ச் பேசஞ்சர் ஸ்கிரீன் மற்றும் ஃபால்கன் 700 ADAS பாதுகாப்பு அமைப்பு போன்ற நவீன அம்சங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செரி ஆட்டோமொபைல், இந்த மூன்று கார்களின் இந்திய அறிமுக தேதியை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனால், இவ்வளவு சிறப்பான ரேஞ்ச், செயல்திறன் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் இந்த கார்கள் இந்திய சந்தைக்கு வந்தால், தற்போதுள்ள கார் நிறுவனங்களுக்கு இது ஒரு பெரிய சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.