5 கார்கள் இருந்தால் போதும்... கார் வாடகைத் தொழில் தொடங்க புதிய அரசு விதிகள்!

Published : Nov 16, 2026, 02:20 PM IST

சொந்தமாக கார் வாடகைத் தொழில் தொடங்க விரும்புகிறீர்களா? இதற்காக இனி 50 கார்கள் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகலாம். உரிமக் கட்டணம், தகுதிகள், பாதுகாப்பு விதிகள் என்னென்ன? முழு விவரம் இதோ.

PREV
15
50 கார்களுக்குப் பதிலாக 5 கார்கள் போதும்

இந்தியாவில் கார் வாடகைத் தொழிலுக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. சில மணி நேரம், நாட்கள் அல்லது வாரங்களுக்கு வாடகைக் கார்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில், சிறு தொழில்முனைவோரும் இந்தத் துறையில் நுழைவதற்கு ஏற்ற வகையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் புதிய மாற்றங்களை முன்மொழிந்துள்ளது. இதன்படி, கார் வாடகை நிறுவனத்தைத் தொடங்குவதற்கான குறைந்தபட்ச வாகன எண்ணிக்கை 50ல் இருந்து 5 ஆகக் குறைக்கப்பட உள்ளது. இது தொடர்பான வரைவு திட்டத்திற்கு Rent-a-Cab Scheme 2026 எனப் பெயரிடப்பட்டுள்ளது.

25
ஒரே இடத்தில் இரண்டு கார்கள் கட்டாயம்

புதிய முன்மொழிவின்படி, ஒரு நிறுவனம் மொத்தம் குறைந்தது 5 கார்களை வைத்திருக்க வேண்டும். அதேநேரத்தில், ஒவ்வொரு செயல்பாட்டு மற்றும் பராமரிப்பு இடத்திலும் குறைந்தது 2 கார்கள் இருக்க வேண்டும். இதனால் சிறிய முதலீட்டாளர்களும் இந்தத் தொழிலில் நுழைய வாய்ப்பு உருவாகும். மேலும், வாடிக்கையாளர்களுக்கு ஓட்டுநர் இல்லாமல் தாங்களே ஓட்டிச் செல்லும் கார்கள் மற்றும் ஓட்டுநருடன் கூடிய கார்கள் என இருவகையான சேவைகளையும் வழங்க முடியும். பழைய விதிகளில் இருந்த ஐந்து சுற்றுலா நகரங்களில் கிளைகள் வைத்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் நீக்க முன்மொழியப்பட்டுள்ளது.

35
ரூ.25,000 கட்டணத்தில் ஒரே உரிமம்

தற்போது வெவ்வேறு செயல்பாட்டு இடங்களுக்கு தனித்தனி உரிம நடைமுறைகள் இருப்பதால் நிறுவனங்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதை எளிமைப்படுத்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் முழுவதும் செல்லுபடியாகும் ஒரே மின்னணு உரிமத்தை வழங்க முன்மொழியப்பட்டுள்ளது. இதற்கான கட்டணம் ரூ.25,000 என நிர்ணயிக்கப்பட உள்ளது. வாகனங்களின் எண்ணிக்கை அல்லது செயல்பாட்டு இடங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து இந்தக் கட்டணம் மாறாது. உரிமம் வழங்குதல் மற்றும் புதுப்பித்தலுக்கு 60 நாட்கள் காலவரம்பும், வாகனங்கள் அல்லது செயல்பாட்டு இடங்களைச் சேர்ப்பதற்கான விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் முடிவெடுக்கும் நடைமுறையும் முன்மொழியப்பட்டுள்ளன.

45
பயணிகள் பாதுகாப்புக்கு புதிய கட்டுப்பாடுகள்

தொழில் தொடங்குவதற்கான விதிகள் எளிமையாக்கப்பட்டாலும் பாதுகாப்பு விஷயத்தில் கூடுதல் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட உள்ளன. வாடகைக் கார்களில் செயல்படும் இடம் கண்டறியும் கருவி மற்றும் முதலுதவிப் பெட்டி கட்டாயமாக இருக்க வேண்டும். பயணிகள், ஓட்டுநர் உள்ளிட்ட அனைவருக்கும் உரிய காப்பீடு அவசியம். வாகனப் பதிவு, தகுதிச் சான்று, மாசுக் கட்டுப்பாட்டுச் சான்று ஆகியவை செல்லுபடியாக இருக்க வேண்டும். நிறுவனங்கள் இணையதளம், 24 மணி நேர புகார் உதவி, அவசரப் பழுதுபார்ப்பு மற்றும் இழுவை வாகன வசதிகளையும் வழங்க வேண்டும்.

55
2027 ஜனவரி முதல் அமலுக்கு வருமா?

இந்த வரைவு திட்டத்தில் ஓட்டுநர்களுக்கான காவல்துறை சரிபார்ப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு விதிகளும் இடம்பெற்றுள்ளன. மேலும், வாகனங்களின் முதல் பதிவுத் தேதியிலிருந்து 9 ஆண்டுகளுக்கு மேல் பழையதாக இருக்கக்கூடாது என்றும், உரிமம் 5 ஆண்டுகள் செல்லுபடியாகும் என்றும் முன்மொழியப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் 1989ஆம் ஆண்டின் பழைய விதிமுறைகளுக்குப் பதிலாக 2027 ஜனவரி முதல் அமல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது இன்னும் இறுதி செய்யப்படாத வரைவு மட்டுமே. பொதுமக்கள் மற்றும் தொடர்புடைய தரப்பினர் கருத்துகளைத் தெரிவிக்க டிசம்பர் 5, 2026 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories