Hero Vida UBX E-Bike: TFT டிஸ்ப்ளே, டூயல் டிஸ்க் பிரேக்; பெட்ரோல் பைக்குகளுக்கு டஃப் கொடுக்க வரும் ஹீரோவின் புதிய இ-பைக்!

Published : Nov 16, 2026, 10:41 AM IST

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் பைக்கான Hero Vida UBX இந்தியச் சாலைகளில் சோதனை ஓட்டத்தில் சிக்கியுள்ளது. 2027 வெளியீடு மற்றும் சிறப்பம்சங்களை அறிக!

PREV
15
ஹீரோவின் முதல் எலக்ட்ரிக் பைக் 'விடா யுபிஎக்ஸ்' (Vida UBX)

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகனப் பிரிவான விடா (Vida), தனது முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளான 'விடா யுபிஎக்ஸ்' (Vida UBX) பைக்கை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தத் தீவிரமாகத் தயாராகி வருகிறது. சமீபத்தில் இத்தாலியின் மிலன் நகரில் நடைபெற்ற எக்மா (EICMA) கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த பைக், தற்போது இந்தியச் சாலைகளில் தீவிர சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. 2027-ம் ஆண்டின் நடுப்பகுதியில் இந்த பைக் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சோதனை ஓட்டப் படங்கள் மூலம் வெளியாகியுள்ள இதன் வடிவமைப்பு மற்றும் முக்கியச் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களைப் பார்க்கலாம்.

25
ஆக்ரோஷமான சூப்பர்மோட்டோ வடிவமைப்பு

விடா யுபிஎக்ஸ் எலக்ட்ரிக் பைக் பார்ப்பதற்கு மிகவும் ஆக்ரோஷமான மற்றும் ஸ்போர்ட்டியான சூப்பர்மோட்டோ (Supermoto) தோற்றத்தைக் கொண்டுள்ளது. இதன் முன்பக்கத்தில் ஒற்றை எல்.இ.டி (LED) புரொஜெக்டர் முகப்பு விளக்கு, மெல்லிய எல்.இ.டி இண்டிகேட்டர்கள் மற்றும் ஹெட்லைட்டிற்குக் கீழே பறவையின் அலகு போன்ற கூர்மையான அமைப்பு கொடுக்கப்பட்டு உள்ளது. இதன் டிஜிட்டல் மீட்டர் கன்சோல் காற்றைத் தடுக்கும் ஃபிளைஸ்கிரீன் (Flyscreen) போலவும் செயல்படும் வகையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் சிங்கிள்-பீஸ் இருக்கை மற்றும் தனித்துவமான ஸ்விங்ஆர்ம் அமைப்பு உள்ள போதிலும், பின்னால் அமர்பவருக்கான இடவசதி சற்று குறைவாகவே இருக்கும் எனத் தெரிகிறது.

35
சஸ்பென்ஷன், பேட்டரி மற்றும் பிரேக்கிங்

கரடுமுரடான சாலைகளிலும் அதிக வேகத்திலும் வண்டி ஆடாமல் நிலையாகச் செல்வதற்காக, இந்த பைக்கின் முன்பக்கத்தில் அப்சைடு-டவுன் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் மோனோ-ஷாக் சஸ்பென்ஷனும் வழங்கப்பட உள்ளன. சிறந்த பாதுகாப்பிற்காக முன்பக்கம் மற்றும் பின்பக்கம் ஆகிய இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் வசதி இடம்பெறவுள்ளது. சாதாரண பெட்ரோல் பைக்குகளில் இன்ஜின் இருக்கும் அதே நடுப்பகுதியில் இதன் பேட்டரி பேக் பொருத்தப்பட்டு, செயின் டிரைவ் சிஸ்டம் மற்றும் அகலமான பின்பக்க டயர் கொடுக்கப்பட்டுள்ளது.

45
நவீன தொழில்நுட்ப வசதிகள்

இந்த புதிய மின்சார பைக்கில் முழுமையான வண்ண டிஎஃப்டி (TFT) டிஸ்ப்ளே இடம்பெற உள்ளது. ஹேண்டில்பாரில் உள்ள கட்டுப்பாட்டு சுவிட்சுகள் மூலம் இயக்கக்கூடிய இந்தத் திரையில் வண்டியின் வேகம், பேட்டரி சார்ஜ் அளவு மற்றும் இதர முக்கியத் தகவல்களைத் துல்லியமாகப் பார்க்க முடியும். இருப்பினும் இதன் இறுதி மென்பொருள் மற்றும் மொபைல் கனெக்டிவிட்டி வசதிகள் குறித்த விவரங்களை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை.

55
எதிர்பார்க்கப்படும் வெளியீடு மற்றும் விலை

தற்போது வரை எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் விடா நிறுவனம், ஸ்போர்ட்டியான பைக் அனுபவத்தை விரும்பும் இளைஞர்களைக் கவர 2027-ஆம் ஆண்டில் இந்த மோட்டார்சைக்கிளைக் களம் இறக்கத் திட்டமிட்டுள்ளது. ஹீரோ நிறுவனம் இந்த பைக்கின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதி, ரேஞ்ச் (Range) மற்றும் விலை விவரங்களை இன்னும் அறிவிக்கவில்லை. தயாரிப்பு நிலை மாடல் அதிகாரப்பூர்வமாக வெளியான பிறகே இதன் போட்டித் திறன் முழுமையாகத் தெரியவரும்.

Read more Photos on
click me!

Recommended Stories