ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் தனது விர்டஸ் பிரீமியம் செடான் கார்களுக்கு தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. மற்ற வேரியண்ட்களிலும் கணிசமான சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த சலுகை புதிய கார் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஏற்றதாக மாறியுள்ளது.
2025 டிசம்பரில் பிரீமியம் செடான் கார் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு ஃபோக்ஸ்வேகன் ஒரு பெரிய சர்ப்ரைஸை வழங்கியுள்ளது. விர்டாஸ் மாடலின் பல வேரியன்ட்களில் இந்த மாதம் முக்கியமான தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக ரூ.1.56 லட்சம் வரை சேமிப்பு கிடைக்க வாய்ப்புள்ளதால், வருட இறுதி சலுகைகளில் விர்டஸ் மாடல்கள் அதிக கவனம் செலுத்துகின்றன. எந்த வேரியண்டில் எந்த அளவு தள்ளுபடி கிடைக்கிறது என்பது வாங்குபவர்களுக்கு முக்கியமான தகவலாகும்.
24
விர்டஸ் வேரியன்ட் சலுகை
விர்டஸின் 1.0 டிஎஸ்ஐ ஹைலைன் வேரியன்ட் மிகப்பெரிய சலுகையைப் பெற்றுள்ளது. இந்த வேரியனில் ரூ.1.56 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது, இது முழு வரிசையிலும் அதிகபட்ச சலுகை. சிறப்பு விலை சலுகைகள் சேர்க்கப்பட்டதால், இந்த மாடல் பட்ஜெட்டில் இருக்கும் வாடிக்கையாளர்களை மேலும் ஈர்க்கும் வகையில் உள்ளது. சிறந்த கம்பீரமான அம்சங்கள் குறைந்த விலையில் பெற விரும்புபவர்களுக்கு இது மிகச் சிறந்த தேர்வாகும்.
34
பிரீமியம் செடான் விலை குறைப்பு
அடுத்ததாக டாப்லைன் வேரியன்ட் ரூ.1.50 லட்சம் தள்ளுபடியுடன் கிடைக்கிறது. ஏற்கனவே பல பிரீமியம் அம்சங்களைக் கொண்ட இந்த மாடல், தற்போதைய சலுகையால் மேலும் கவர்ச்சியாக மாறியுள்ளது. 2025 மாடல் ஹைலைன் பிளஸ் வேரியன்ட் வாங்குவோருக்கும் ரூ.80,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது. இதனால் பட்ஜெட்-பிரண்ட்லி சேடன் தேடுபவர்களுக்கு விர்டஸ் ஒரு நம்பகமான ஆப்ஷனாக உருவாகியுள்ளது. உங்களுக்கு அதிக சக்தி மற்றும் ஸ்போர்ட்டி செயல்திறன் விருப்பமாக இருந்தால், 1.5 டிஎஸ்ஐ ஜிடி பிளஸ் வேரியன்ட் சரியான தேர்வு.
மேனுவல் மாடலில் ரூ.50,000 வரை, டிஎஸ்ஜி ஆட்டோமேட்டிக் வேரியனில் ரூ.1.20 லட்சம் வரை சலுகை உள்ளது. ஜிடி பிளஸ் வரிசையில் இவை மிகவும் சிறந்த தள்ளுபடிகளாக சந்தையில் பேசப்படுகின்றன. இந்த தள்ளுபடிகள் மாநிலம், டீலர், வேரியன்ட், நிறம் போன்றவற்றைப் பொறுத்து மாறுபடலாம். எனவே, வாங்க முன் அருகிலுள்ள டீலரை தொடர்பு கொண்டு உண்மையான தள்ளுபடி விவரங்களை உறுதிப்படுத்துவது நல்லது.