டாடா சியாரா எஸ்யூவி: விலை அறிவிப்பு! கிரெட்டாவுக்கு சவாலா?

Published : Dec 08, 2025, 03:48 PM IST

டாடா மோட்டார்ஸ் தனது புதிய சியாரா எஸ்யூவியின் விலை விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த புதிய மாடல், ஹூண்டாய் கிரெட்டாவுக்கு கடுமையான போட்டியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
12
டாடா சியாரா விலை

டாடா மோட்டார்ஸ் 2025 நவம்பர் 25 அன்று சியாரா எஸ்யூவியின் ஆரம்ப விலை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அதிகமான வேரியண்ட்களின் விலை விவரங்களும் வெளியாகி உள்ளது வெளியிடப்பட்டுள்ளன. அனுபவிப்பவருக்கு மலிவான தேர்வாக இருக்கும் ஸ்மார்ட்+ என்ட்ரி-லெவல் மாடலில், 1.5 லிட்டர் நெச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் வேரியண்ட் ரூ.11.49 லட்சத்திலும், டீசல் மாடல் ரூ.12.99 லட்சத்திலும் கிடைக்கிறது.

பியூர் மற்றும் பியூர்+ டிரிம்கள் தற்போதைக்கு விற்பனையில் உள்ளன. பியூர் மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் விருப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன; அதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.12.99 லட்சம் முதல் ரூ.15.99 லட்சம் வரை உள்ளது. பியூர்+ வேரியண்ட் ரூ.14.49 லட்சம் முதல் ரூ.17.49 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

22
டாடா சியாரா அம்சங்கள்

சியரா ஆறு வண்ணங்களில் கிடைக்கிறது. கூர்க் கிளவுட், ப்ரிஸ்டைன் ஒயிட், மூனார் மிஸ்ட், ப்யூர் கிரே, அந்தமான் அட்வென்சர் மற்றும் பெங்கால் ரூஜ் ஆகும். ARGOS எனப்படும் புதிய தளத்தில் இந்த எஸ்யூவி, மூன்று வலுவான இன்ஜின் தேர்வுகளுடன் வருகிறது. 106 bhp வழங்கும் 1.5L நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் பெட்ரோல், 160 bhp திறன் கொண்ட 1.5L டர்போ பெட்ரோல் மற்றும் 118 bhp டர்போ டீசல். அதிக சக்தி மற்றும் போட்டித்தன்மை கொண்ட விலை காரணமாக, இந்த மாடல் மற்ற பிராண்டுகளுக்கு சவாலாக உள்ளது.

எதிர்காலத்தில், சியாராவிற்கு ஆல்-வீல் டிரைவ் (AWD) வேரியண்ட்களும் 7-சீட்டர் பதிப்பும் வரலாம் என தகவல்கள் வெளிவந்துள்ளன. டாடாவின் ARGOS தளம் பல வகையான உடல் வடிவம் மற்றும் பவர்டிரெய்ன்களை ஆதரிக்கக்கூடியது. சிஎன்ஜி மற்றும் ஹைப்ரிட் ஆப்ஷன்களை நிறுவனம் பரிசீலிக்கிறது என்றாலும், இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. அறிமுகத்திலிருந்து, சியாரா சந்தையில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இது இந்தியாவில் ஹூண்டாய் கிரெட்டாவுடன் போட்டியிடும்.

Read more Photos on
click me!

Recommended Stories