கேடிஎம் டியூக் 200 vs பஜாஜ் பல்சார் NS200 TFT: 200சிசி பைக் பிரியர்களுக்கு எது பெஸ்ட் சாய்ஸ்?

Published : Nov 05, 2026, 11:35 AM IST

2026 பஜாஜ் பல்சார் NS200 TFT மற்றும் கேடிஎம் டியூக் 200 பைக்குகளில் எது சிறந்த தேர்வு? இன்ஜின் பவர், வசதிகள், ஹேண்ட்லிங் மற்றும் விலை ஒப்பீட்டை விரிவாகப் பார்போம்.

PREV
15
குறைந்த விலையில் ஸ்போர்ட்ஸ் பைக்குகள்

இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் 200சிசி ஸ்டிரீட்பைட்டர் (Streetfighter) பிரிவில் எப்போதுமே அனல் பறக்கும் போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக, மிரட்டலான செயல்திறன் மற்றும் நவீன அம்சங்களுடன் களமிறங்கியுள்ள பஜாஜ் பல்சார் என்எஸ்200 டிஎஃப்டி (Bajaj Pulsar NS200 TFT) மற்றும் கேடிஎம் டியூக் 200 (KTM Duke 200) ஆகிய 2 பைக்குகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.

25
கேடிஎம் டியூக் 200

கேடிஎம் டியூக் 200 என்பது அதன் ஆக்ரோஷமான தோற்றம், துல்லியமான ஹேண்ட்லிங் மற்றும் சிலிர்க்க வைக்கும் இன்ஜின் செயல்திறனுக்காக அறியப்படும் ஒரு பிரீமியம் நேக்ட் ஸ்டிரீட்பைட்டர் பைக் ஆகும்.

வடிவமைப்பு & சேசிஸ் - தனித்துவமான வெளிப்படையான ட்ரெல்லிஸ் ஃபிரேம் மற்றும் ஸ்போர்ட்டி ரைடிங் பொசிஷன் ஆகியவை இதனை 200சிசி பிரிவில் எளிதில் அடையாளம் காட்டுகின்றன.

செயல்திறன் - 199.5சிசி லிக்யூடு கூல்டு இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது 25 பிஎஸ் பவரையும், 19.3 என்எம் டார்க்கையும் வழங்கும். 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் குவிக்சீஃப்டருடன் இது வருகிறது.

அப்கிரேட்கள் & அம்சங்கள் - 2026 அப்கிரேட்டாக ரைடு-பை-வயர், டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் ஸ்டிரீட், ரெயின் ரைடிங் மோடுகள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் 5 இன்ச் கலர் டிஎஃப்டி டிஸ்ப்ளே புளூடூத் இணைப்பு மற்றும் கால் அலெர்ட்டுகளை வழங்கும்.

விலை - இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ.2.07 லட்சமாகும்.

35
பஜாஜ் பல்சார் NS200 TFT

பஜாஜ் நிறுவனத்தின் பல்சார் வரிசையில் 2026-ஆம் ஆண்டின் மிகச் சிறந்த மற்றும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அப்கிரேட்களில் இந்த என்எஸ்200 டிஎஃப்டி மாடலும் ஒன்றாகும்.

வடிவமைப்பு & அம்சங்கள் - பரிச்சயமான மஸ்குலர் டிசைனுடன் புதிய கலர் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளன. அதிக விலை கொடுக்காமல் ஸ்போர்ட்டி பெர்ஃபார்மன்ஸ் விரும்புவோருக்காக இது உருவாக்கப்பட்டுள்ளது.

செயல்திறன் - 99.5சிசி லிக்யூடு கூல்டு சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் கொடுக்கப்பட்டுள்ளது. இது 25.5 பிஎஸ் பவரையும், 18.74 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் இருதிசைக் குவிக்சீஃப்டர் (Bi-directional quickshifter) இதில் உண்டு.

தொழில்நுட்பம் - புதிய 5 இன்ச் டிஎஃப்டி டிஸ்ப்ளே கூகுள் மேப்ஸ் மிரரிங், ரைடு மோடுகள், டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் ரைடு-பை-வயர் தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது.

விலை - இதன் எக்ஸ்-ஷோரூம் விலை தோராயமாக ரூ.1.60 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

45
விலை & மதிப்பு

விலையைப் பொறுத்தவரை பஜாஜ் பல்சார் என்எஸ்200 டிஎஃப்டி மாடலானது கேடிஎம் டியூக் 200-ஐ விட மிகவும் குறைவான விலையில் கிடைக்கிறது. பஜாஜ் பைக் சுமார் ரூ.1.60 லட்சத்திற்கும், கேடிஎம் பைக் சுமார் ரூ.2.07 லட்சத்திற்கும் விற்கப்படுகிறது.

அதாவது கேடிஎம் பைக் விலையானது பல்சார் பைக்கை விட தோராயமாக ரூ.47,000 அதிகமாகும். குறைந்த பட்ஜெட்டில் அதிகப்படியான செயல்திறனையும் நவீன தொழில்நுட்பங்களையும் விரும்புவோருக்கு பஜாஜ் பல்சார் என்எஸ்200 மிகச்சிறந்த பணமதிப்பை (Value for Money) வழங்குகிறது. பல்சார் என்எஸ்200 டிஎஃப்டி மாடலானது கலர் டிஎஃப்டி டிஸ்ப்ளே, கூகுள் மேப்ஸ் மிரரிங், டிராக்ஷன் கன்ட்ரோல், ரைடு மோடுகள் மற்றும் குவிக்சீஃப்டர் என ஏராளமான அம்சங்களை அள்ளி வழங்குகிறது.

அதேபோல் கேடிஎம் டியூக் 200 மாடலும் பிரீமியம் டிஎஃப்டி டிஸ்ப்ளே, புளூடூத் இணைப்பு, டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் ரைடு-பை-வயர் தொழில்நுட்பத்துடன் மிக நவீனமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. பல்சார் பைக் கூடுதல் ரைடு மோடுகளை வழங்கும்போது, கேடிஎம் பைக் தனது பிரீமியம் சேசிஸ் மற்றும் ஹேண்ட்லிங் பண்புகளில் அதிக கவனம் செலுத்துகிறது.

55
எதைத் தேர்ந்தெடுக்கலாம்?

பஜாஜ் பல்சார் NS200 TFT - குறைந்த விலையில், பவர்ஃபுல்லான இன்ஜின், ஏராளமான நவீன அம்சங்கள் மற்றும் அருமையான மதிப்பு (Value for Money) வேண்டும் என்றால் இதுவே சரியான மற்றும் புத்திசாலித்தனமான தேர்வாகும்.

கேடிஎம் டியூக் 200 - விலை கூடுதலாக இருந்தாலும் பரவாயில்லை; பிரீமியம் ஸ்டைல், மிரட்டலான ஹேண்ட்லிங் மற்றும் கேடிஎம் பிராண்டின் ஸ்போர்ட்டி கேரக்டர் தான் முக்கியம் என்றால் இது கூடுதல் முதலீட்டிற்கு முழுமையான பலனைத் தரும்.

Read more Photos on
click me!

Recommended Stories