Bajaj Avenger Street 220 : பஜாஜ் அவெஞ்சர் ஸ்ட்ரீட் 220 மீண்டும் அறிமுகம்.. விலை எவ்வளவு தெரியுமா?

Published : Jun 03, 2026, 01:12 PM IST

Bajaj Avenger Street 220 : பஜாஜ் ஆட்டோ தனது பிரபல க்ரூசர் மோட்டார் சைக்கிளான அவெஞ்சர் ஸ்ட்ரீட் 220-ஐ புதிய நிறங்கள் மற்றும் அப்டேட்டுகளுடன் இந்திய சந்தையில் மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.

PREV
15
பஜாஜ் அவெஞ்சர் ஸ்ட்ரீட் 220

இந்திய க்ரூசர் பைக் சந்தையில் தனது தனி அடையாளத்தை உருவாக்கிய பஜாஜ் அவெஞ்சர் ஸ்ட்ரீட் 220, புதிய மாற்றங்களுடன் மீண்டும் களமிறங்கியுள்ளது. முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளரான பஜாஜ் ஆட்டோ, இந்த புதுப்பிக்கப்பட்ட மாடலை ரூ.1.30 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நகர சாலைகளில் சௌகரியமான பயணத்தை விரும்பும் வாடிக்கையாளர்களை குறிவைத்து இந்த மாடல் உள்ளது.

25
பஜாஜ் அவெஞ்சர் 220

புதிய மாடலில் எபனி பிளாக் மற்றும் காக்டெயில் ரெட் வைன் என இரண்டு புதிய நிறங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதைத் தவிர, பழைய மாடலின் கம்பீரமான க்ரூசர் தோற்றம் தொடர்கிறது. உயரமான ஹேண்டில்பார், முன்னோக்கி அமைக்கப்பட்ட கால்தாங்கி மற்றும் தளர்வான அமர்வு ஆகியவை நீண்ட பயணங்களுக்கும் ஏற்ற அனுபவத்தை வழங்குகின்றன.

35
இந்திய குரூஸர் பைக்

அவெஞ்சர் ஸ்ட்ரீட் 220-இல் பழைய நம்பகமான 220 சிசி ஏர்-ஆயில் கூல்டு, ஒற்றை சிலிண்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த சக்திவாய்ந்த இயந்திரம் 19 ஹார்ஸ் பவர் மற்றும் 17 நியூட்டன் மீட்டர் டார்க் திறனை வழங்குகிறது. ஐந்து வேக கியர்பாக்ஸ் மூலம் சக்தி பின்சக்கரத்துக்கு அனுப்பப்படுகிறது.

45
ஏபிஎஸ் வசதி

பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டிலும் நிறுவனம் கவனம் செலுத்தியுள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறத்தில் சரிசெய்யக்கூடிய ட்வின் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. 280 மில்லிமீட்டர் முன் டிஸ்க் பிரேக், பின்புற டிரம் பிரேக் மற்றும் ஒற்றை சேனல் ஏபிஎஸ் வசதியும் இடம்பெற்றுள்ளது.

55
பஜாஜ் மோட்டார்சைக்கிள்

கருப்பு அலாய் வீல்கள் மற்றும் டியூப்லெஸ் டயர்கள் இந்த மாடலின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். 13 லிட்டர் எரிபொருள் டேங்க், 160 கிலோ எடை மற்றும் வெறும் 737 மில்லிமீட்டர் சீட் உயரம் காரணமாக, குறைந்த உயரம் கொண்ட ஓட்டுநர்களுக்கும் இது வசதியான தேர்வாக அமையும். புதிய நிறங்களுடன் வந்துள்ள அவெஞ்சர் 220, க்ரூசர் ரசிகர்களிடம் மீண்டும் வரவேற்பைப் பெறுமா என்பதே தற்போது கவனிக்கப்படும் கேள்வியாக உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories