Top Selling Scooter: இந்திய மக்கள் அதிகம் வாங்கிய ஸ்கூட்டர் எது தெரியுமா? மே மாத விற்பனை லிஸ்ட் இதோ

Published : Jun 03, 2026, 08:26 AM IST

Top Selling Scooter: பெட்ரோல் விலை உயர்வு மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களின் மீதான ஆர்வம் காரணமாக, இந்தியர்கள் அதிகமாக தேர்வு செய்த ஸ்கூட்டர் எது என்ற பட்டியல் வெளியாகியுள்ளது. எந்த நிறுவனம் முன்னிலையில் உள்ளது என்பதை இங்கு காண்போம்.

PREV
17
அதிக அளவில் விற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

இந்தியாவின் எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தை, மே 2026 மாதத்தில் புதிய உயரத்தை எட்டியுள்ளது. பெட்ரோல் விலை ஏற்றம், குறைந்த பயணச் செலவு மற்றும் மின்சார வாகனங்கள் குறித்த அதிகரிப்பு ஆகியவை சேர்ந்து இந்த சந்தையை வேகமாக முன்னேற்றியுள்ளன. அதன் விளைவாக, விற்பனை கனிசமான உயர்வை பதிவு செய்யப்பட்டது.

27
இருசக்கர வாகன விற்பனை

மே 2026 மாதத்தில் மட்டும் நாட்டில் 1.70 லட்சத்துக்கும் அதிகமான எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் இது 63 சதவீத வளர்ச்சியாகும். மார்ச் 2026-ல் உருவான சாதனைக்குப் பிறகு, இது இரண்டாவது மிகப்பெரிய மாத விற்பனையாகக் கருதப்படுகிறது.

குறைந்த விலை.. அதிக வசதி! டியாகோ முதல் மேக்னைட் வரை 360 கேமரா கார்கள்

37
பெட்ரோல் விலை அதிகரிப்பு

மாதத்தின் இரண்டாம் பாதியில் பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது, பலரின் கவனத்தை மின்சார ஸ்கூட்டர்கள் நோக்கி திருப்பியது. முதல் இரண்டு வாரங்களைக் காட்டிலும் பின்னர் விற்பனை உயர்ந்தது. இதன் காரணமாக பல நிறுவனங்கள் தங்களது இரண்டாவது சிறந்த மாத சாதனையை பதிவு செய்துள்ளன.

47
முதலிடத்தில் டிவிஎஸ்

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் 42,415 வாகனங்களை விற்று தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளது. ஐக்யூப் மாடல் நிறுவனத்தின் முக்கிய பலமாக உள்ளது. அதே நேரத்தில் ஆர்பிட்டர் மாடலுக்கான வரவேற்பும் உயர்ந்து வருகிறது. 25 சதவீத சந்தைப் பங்குடன் டிவிஎஸ் முன்னணியில் உள்ளது.

ரூ.5 லட்சத்துக்குள் 360° கேமரா...டாடா காரில் எல்இடி லைட் முதல் 6 ஏர்பேக் வரை செம அப்டேட்!

57
பஜாஜ் ஆட்டோ

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் சேடக் ஸ்கூட்டர் 39,142 வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. டிவிஎஸ் மற்றும் பஜாஜ் இடையேயான விற்பனை வித்தியாசம் தற்போது வெறும் 3,273 வாகனங்களாக மட்டுமே உள்ளது. இதனால் முதலிடப் போட்டி மேலும் சூடுபிடித்துள்ளது.

67
ஏதர் எனர்ஜி

ஏதர் எனர்ஜி 28,211 விற்பனையுடன் தனது வளர்ச்சியை இரட்டிப்பாக்கியுள்ளது. ரிஸ்டா மாடல் 3 லட்சம் மொத்த விற்பனையை கடந்துள்ளது. ஹீரோ விடா 158 சதவீத வளர்ச்சியுடன் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த நிறுவனத்தின் சந்தை நிலை மேலும் வலுவடைந்துள்ளது.

77
ஓலா எலக்ட்ரிக்

மறுபுறம், ஓலா எலக்ட்ரிக் கடந்த ஐந்து மாதங்களில் சிறந்த விற்பனையை பதிவு செய்தாலும், ஆண்டு அடிப்படையில் சரிவை சந்தித்துள்ளது. கிரீவ்ஸ், ரிவர் மற்றும் பிகாஸ் போன்ற நிறுவனங்கள் வளர்ச்சி பாதையில் பயணிக்கின்றன. மொத்தத்தில், இந்திய மின்சார இருசக்கர சந்தை இன்று மாற்று தேர்வை தாண்டி, எதிர்கால போக்குவரத்தின் முக்கிய திசையாக மாறி வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories