இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, 2026 மே மாதத்தில் மொத்தமாக 2,42,688 கார்களை விற்பனை செய்து புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது. கடந்த ஆண்டு இதே மே மாதத்தில் 1,80,777 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்த நிலையில், இந்த ஆண்டு விற்பனை மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது. இதுவே மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஒரு மாதத்தில் நடந்த அதிகபட்ச விற்பனையாகும்.
உள்நாட்டு சந்தையில் மட்டும் நிறுவனம் 1,93,535 கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. மற்ற நிறுவனங்களுக்கு 7,239 கார்களை சப்ளை செய்துள்ளது. அதே சமயம், 41,914 கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில் உள்நாட்டு விற்பனை (LCV உட்பட) 1,38,690 ஆக இருந்த நிலையில், இந்த ஆண்டு 1,93,535 ஆக உயர்ந்துள்ளது.