பெங்களூருவில் ஆட்டோ கட்டண உயர்வு குறித்து இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆட்டோ சங்கங்கள் குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.40 ஆகவும், அதன்பிறகு ஒரு கிலோமீட்டருக்கு ரூ.20 ஆகவும் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெங்களூருவில் ஆட்டோ கட்டண உயர்வு குறித்து இன்று மாவட்ட ஆட்சியர் ஜெகதீஷ் தலைமையில் ஆட்டோ சங்கங்களின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆட்டோ மீட்டர் கட்டண உயர்வு தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கங்கள் ஏற்கனவே பலமுறை போக்குவரத்துத் துறைக்கு மனு அளித்துள்ளனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பும், மாநில போக்குவரத்து ஆணையத்தின் தலைவரான பெங்களூரு மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
23
பெங்களூரு ஆட்டோ கட்டணம் உயர்வு
ஆனால், கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர் ஆட்டோ சங்கங்கள் மீண்டும் கூட்டம் நடத்தி ஆட்டோ கட்டண உயர்வு குறித்த உத்தரவை வெளியிட வலியுறுத்தின. இந்தக் கூட்டத்தில், ஆட்டோவின் குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.30ல் இருந்து ரூ.40 ஆகவும், அதன்பிறகு ஒரு கிலோமீட்டருக்கு ரூ.15ல் இருந்து ரூ.20 ஆகவும் உயர்த்த வேண்டும் என்று ஆட்டோ சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
33
ஆட்டோ ஓட்டுநர் சங்க கூட்டம்
கட்டண சீராய்வுக் குழு ஏற்கனவே குறைந்தபட்ச கட்டணத்தை ரூ.30ல் இருந்து ரூ.35 ஆகவும், அதன்பிறகு ஒரு கிலோமீட்டருக்கு ரூ.15 ஆகவும் நிர்ணயிக்க பரிந்துரை செய்துள்ளது. இந்தக் கருத்துகளின் அடிப்படையில் விவாதித்து கட்டணத்தை சீராய்வு செய்வார்கள். எப்படி இருந்தாலும் ஆட்டோ கட்டணம் உயரப்போகிறது என்று தெளிவாக தெரிகிறது.