சர்ருன்னு சென்னை - திருப்பதி போயிட்டு வரலாம்.. ஒருமுறை சார்ஜ் செய்தாலே போதுமா!

Published : Aug 31, 2024, 09:27 AM IST

ஏத்தர் ரிஸ்ட்டா ஸ்கூட்டர் நவீன அம்சங்கள் மற்றும் புது அப்டேட்டுகளுடன் வருகிறது. ரிவர்ஸ் மோட், ஸ்கிட் கன்ட்ரோல் டயர்கள், நேரடி இருப்பிட பகிர்வு, திருட்டு எதிர்ப்பு அம்சம் மற்றும் கூகுள் மேப் போன்ற அம்சங்கள் இதில் உள்ளன. 2.9 kWh மற்றும் 3.7 kWh பேட்டரி பேக் விருப்பங்களுடன் கிடைக்கும் இந்த ஸ்கூட்டர், ரூ. 109,999 முதல் தொடங்கும் விலையில் 7 வண்ணங்களில் வருகிறது.

PREV
17
சர்ருன்னு சென்னை - திருப்பதி போயிட்டு வரலாம்.. ஒருமுறை சார்ஜ் செய்தாலே போதுமா!
Ather Rizta Electric Scooter

ஏத்தர் ரிஸ்ட்டா ஸ்கூட்டர் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டராக வருகிறது. நவீன அம்சங்களுடன் புது அப்டேட்டுகளுடன் இருக்கும் இது நல்ல ஸ்கூட்டர் ஆகும். இந்த ஸ்கூட்டரில் ரிவர்ஸ் மோடு கிடைக்கும்.

27
Ather Rizta

இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் டயர்களை ஸ்கிட் கன்ட்ரோலுக்கு ஏற்றவாறு நிறுவனம் வடிவமைத்துள்ளது. அதேபோல எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் உதவியுடன் உங்கள் நேரலை இருப்பிடத்தை வேறு எந்த ஸ்மார்ட்போனிலும் பகிரலாம். இது திருட்டு எதிர்ப்பு அம்சத்தையும் கொண்டுள்ளது.

37
Electric Scooter

உங்கள் தொலைபேசியின் உதவியுடன் பார்க்கிங் பகுதியில் ஸ்கூட்டரைக் கண்டறியலாம். ஓட்டும் போது ஸ்கூட்டர் விழுந்தால், அதன் மோட்டார் தானாகவே நின்றுவிடும். இதில் கூகுள் மேப் இருப்பது சிறப்பு ஆகும்.

47
Ather Energy

சமீபத்தில் கூகுள் உடன் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இணைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஏத்தர் ஸ்கூட்டரில் அழைப்பு மற்றும் இசை கட்டுப்பாடு, புஷ் நேவிகேஷன், ஆட்டோ ரிப்ளை எஸ்எம்எஸ் போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது.

57
Ather Rizta Features

2.9 kWh பேட்டரி மற்றும் 3.7 kWh பேட்டரி பேக் உடன் வரும் இதன், சிறிய பேட்டரி பேக்கின் வரம்பு 123 கிமீ, பெரிய பேட்டரி பேக்கின் வரம்பு 160 கிமீ ஆகும். அனைத்து வகைகளின் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கிமீ ஆகும். 2.9 kWh பேட்டரி பேக் சார்ஜிங் நேரம் 6.40 மணி நேரம் ஆகும்.

67
Ather Rizta Specifications

இருப்பினும், 3.7 kWh பேட்டரி பேக்கின் சார்ஜிங் நேரம் 4.30 மணிநேரம் மட்டுமே. இதன் மூன்று வகைகளின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 109,999, ரூ. 124,999, ரூ. 144,999 ஆகும். Rizta 7 வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 4 இரட்டை நிற வண்ணங்கள் மற்றும் 3 ஒற்றை நிற வண்ணங்களைக் கொண்டுள்ளது.

77
Ather Rizta Mileage

பேட்டரி, ஸ்கூட்டருக்கு 3 ஆண்டுகள் அல்லது 30,000 கிமீ வாரண்டியையும் நிறுவனம் வழங்குகிறது. இது எளிதாக சென்னையில் இருந்து திருப்பதி வரை ஈசியாக ஒரே ரைடில் செல்ல உதவுகிறது.

ஹோண்டா ஆக்டிவா vs டிவிஎஸ் ஜூபிடர்: அதிக மைலேஜ்.. பெரிய ஸ்டோரேஜ் - எந்த ஸ்கூட்டர் சிறந்தது?

Read more Photos on
click me!

Recommended Stories