EV Subsidy
கனரக தொழில்துறை அமைச்சகத்தின் எலக்ட்ரிக் மொபிலிட்டி புரமோஷன் திட்டம் (இஎம்பிஎஸ்) செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, மின்சார இருசக்கர வாகனங்களுக்கான மானியமும் நிறுத்தப்பட உள்ளது. அதற்கு பிறகு அவற்றை வாங்குவது விலை உயர்ந்ததாகவே இருக்கும்.
EV Scooter
எனவே வாடிக்கையாளர்கள் இந்தத் திட்டத்தின் பலன்களைப் பெறுவதற்கு இதுவே கடைசி மாதமாகும். இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படும் சில பிரீமியம் மின்சார இரு சக்கர வாகனங்கள் EMPSக்கு தகுதியுடையவை. இந்த பட்டியலில் ஏத்தர் 450எக்ஸ், ஏதர் ரிஸ்ட்டா, ஓலா எஸ்1 ப்ரோ, டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேடக், விடா வி1 ப்ரோ ஆகியவை அடங்கும்.
Electric Mobility Promotion Scheme
MPS இன் ஒரு பகுதியாக, மின்சார இருசக்கர வாகனங்களுக்கு ரூ.778 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 500,080 மானிய விலையிலான மின்சார வாகனங்களும் அடங்கும். இந்த திட்டம் மீண்டும் தொடர்ந்து செயல்படுத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.