Ather Rizta: ஓலா, டிவிஎஸ்-க்கு டஃப் கொடுக்கும் ஏத்தர்.. 'ரிஸ்டா' கொடுத்த மாஸ் என்ட்ரி! விற்பனையில் புதிய சாதனை!

Published : Jun 27, 2026, 07:00 AM IST

Electric Scooter: இந்திய இவி சந்தையில் பிரீமியம் மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்திய பெருமை ஏத்தர் நிறுவனத்தையே வந்து சேரும். இதுவரை சுமார் 7 லட்சம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை.

PREV
15
ஏத்தர் எனர்ஜி

ஏத்தர் எனர்ஜி என்பது இந்தியாவின் முன்னணி மற்றும் மிகவும் பிரபலமான எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாகும். 2013-ஆம் ஆண்டு ஐஐடி மெட்ராஸ் முன்னாள் மாணவர்களான தருண் மேத்தா மற்றும் ஸ்வப்னில் ஜெயின் ஆகியோரால் இந்த நிறுவனம் 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்திய இவி (EV) சந்தையில் பிரீமியம் மற்றும் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்திய பெருமை ஏத்தர் நிறுவனத்தையே வந்து சேரும். இதுவரை சுமார் 7 லட்சம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.

25
மிரளும் போட்டி நிறுவனங்கள்

இந்தியாவில் இந்த மைல்கல்லை எட்டும் நான்காவது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமாகும். இதற்கு முன்னதாக, ஓலா எலக்ட்ரிக், டிவிஎஸ் மோட்டார், பஜாஜ் ஆட்டோ ஆகிய மூன்று நிறுவங்கள் இந்த மைல்கல்லை எட்டியுள்ளன.

Renault Kiger: ரூ.1.46 லட்சம் வரை விலை குறைப்பு! மிரட்டலாக என்ட்ரி கொடுத்த புதிய 2026 ரெனால்ட் கைகர்!

35
அசுர வளர்ச்சியான ரிஸ்டா

ஏத்தர் நிறுவனத்தின் இந்த இமாலய வளர்ச்சிக்கு காரணம் பிரத்யேக மாடலான ரிஸ்டா (Rizta) எலக்ட்ரிக் ஸ்கூட்டர்தான். தற்போது ஒவ்வொரு மாதமும் ஏத்தர் நிறுவனம் விற்பனை செய்யும் ஒட்டுமொத்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில், ரிஸ்டா மாடலின் பங்கு மட்டுமே 75 சதவீதமாக உள்ளது. சிறந்த இடவசதி, குடும்பங்களுக்கு ஏற்ற வடிவமைப்பு ஆகியவற்றால் வாடிக்கையாளர்களின் ஆஸ்தான ஸ்கூட்டராக இது மாறியுள்ளது. மேலும், ஏத்தர் தயாரிப்புகளிலேயே விலை குறைவான மாடலும் இதுதான். பொதுப்பார்வையில் இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தாலும், இதன் தரத்திற்காக வாடிக்கையாளர்கள் போட்டிப்போட்டுக் கொண்டு வாங்கி வருகின்றனர்.

45
புதிய சாதனை நோக்கி ஏத்தர் நிறுவனம்

இந்த 2026-ஆம் ஆண்டில் ஏத்தர் நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. ஒரே ஆண்டில் 3 லட்சம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்வது என்ற புதிய மைல்கல்லை ஏத்தர் இந்தாண்டு எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026-ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்கள் கூட இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையிலேயே, ஏத்தர் நிறுவனம் ஏற்கனவே 1.63 லட்சம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2025-ம் ஆண்டில் 2.15 லட்சம் யூனிட்டுகளை விற்பனை செய்ததுதான் ஏத்தர் நிறுவனத்தின் ஒரே ஆண்டிற்கான அதிகபட்ச விற்பனையாக இருந்தது. தற்போது அந்தச் சாதனையை இந்த பெங்களூரு நிறுவனம் மிக எளிதாக முறியடிக்கப் போகிறது.

55
இவி சந்தையில் எகிறும் ஏத்தரின் பலம்

கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, ஏத்தரின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை இந்த 2026-ல் 91 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்த எலக்ட்ரிக் இருசக்கர வாகனச் சந்தையில் ஏத்தரின் சந்தைப் பங்கு தற்போது 17.53 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த 2025-ல் 16 சதவீதமாகவும், அதற்கு முன்பு 2024-ல் வெறும் 11.23 சதவீதமாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories