நாடு முழுவதும் E20 பெட்ரோல் பயன்பாடு அதிகமாகி வருகிறது. இதனால் பழைய வாகன உரிமையாளர்கள் மத்தியில் ஒருவித கவலை ஏற்பட்டுள்ளது. E10 எரிபொருளுக்காக வடிவமைக்கப்பட்ட வாகனங்களில், E20 பெட்ரோல் சில பாகங்களை பாதிக்கும் என ARAI ஆய்வு கூறுகிறது.
நாட்டில் E20 பெட்ரோல் பயன்பாடு பரவலாகி வரும் நிலையில், பழைய வாகன உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். E10 எரிபொருளுக்காக தயாரிக்கப்பட்ட வாகனங்களில் E20 பெட்ரோலைப் பயன்படுத்தினால், எரிபொருள் அமைப்பில் உள்ள சில பாகங்கள் நீண்டகாலத்தில் தேய்மானம் அடையலாம் என ஒரு ஆய்வு அறிக்கை கூறுகிறது.
29
எஆா்ஏஐ-யின் ஆய்வு
2023-க்கு முன் தயாரிக்கப்பட்ட E10 வாகனங்களில் உள்ள சில ரப்பர் பாகங்கள், நீண்ட காலப் பயன்பாட்டில் தேய்மானம் அடையும் வாய்ப்புள்ளது என்று ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அசோசியேஷன் ஆஃப் இந்தியா (ARAI) ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. எந்த பாகங்களில் அதிக கவனம் தேவை?
39
ஃபியூயல் ஹோஸ்கள்
டாங்கில் இருந்து இன்ஜினுக்கு எரிபொருளைக் கொண்டு செல்லும் ஃபியூயல் ஹோஸ்கள், E20 பெட்ரோலில் உள்ள அதிக எத்தனால் அளவால் காலப்போக்கில் கடினமாக மாறலாம் அல்லது விரிசல்களை உருவாக்கலாம் என்று அறிக்கை கூறுகிறது.
இன்ஜின் மற்றும் எரிபொருள் அமைப்பில் உள்ள பல்வேறு இணைப்புகளை சீல் செய்யப் பயன்படும் கேஸ்கட்கள், நீண்ட காலப் பயன்பாட்டில் தேய்மானம் அடைய வாய்ப்புள்ளது. இதனால் சிறிய எரிபொருள் கசிவுகள் ஏற்படலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
59
சீல்கள்
எரிபொருள் வெளியே கசிந்துவிடாமல் தடுக்கப் பயன்படும் ரப்பர் சீல்கள், எத்தனாலின் தாக்கத்தால் கடினமாக மாறலாம் அல்லது அதன் நெகிழ்வுத்தன்மை குறையக்கூடும் என்று ஆய்வில் கூறப்படுகிறது.
69
ஓ-ரிங்குகள்
ஃபியூயல் இன்ஜெக்டர், பம்ப் போன்ற பாகங்களில் பயன்படுத்தப்படும் ஓ-ரிங்குகள் தேய்மானம் அடைந்தால், எரிபொருள் கசிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கக்கூடும்.
79
உலோகப் பாகங்களுக்கு ஆபத்தில்லை
ARAI ஆய்வின்படி, இன்ஜின் உள்ளிட்ட உலோக பாகங்களில் E20 எரிபொருள் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. முக்கிய கவலை ரப்பர் பாகங்கள் சம்பந்தப்பட்டது மட்டுமே.
89
எல்லா வாகனங்களுக்கும் இது பொருந்துமா?
இல்லை. முக்கியமாக E10 எரிபொருளுக்காக வடிவமைக்கப்பட்ட பழைய வாகனங்களில்தான் இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. புதிய தலைமுறை E20-ரெடி வாகனங்கள் இதற்கேற்பவே வடிவமைக்கப்பட்டுள்ளன.
99
அரசு சொல்வது
E20 எரிபொருளைப் பயன்படுத்தியதால் எந்த வாகனத்திற்கும் பெரிய தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக இதுவரை எந்த ஆதாரமும் இல்லை என்று மத்திய அரசு கூறுகிறது. அதேசமயம், ரப்பர் பாகங்களின் நீண்டகால தேய்மான வாய்ப்பை ARAI அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. எனவே, பழைய வாகனங்களின் எரிபொருள் அமைப்பை அவ்வப்போது சரிபார்ப்பது நல்லது.