Mileage Bikes : ரூ.80,000 பட்ஜெட்டில் 75 கி.மீ மைலேஜ் தரும் டாப் 5 பைக்குகள்!

Published : Sep 06, 2026, 12:24 PM IST

Mileage Bikes : இந்தியாவில் குறைந்த பட்ஜெட்டில் அதிக மைலேஜ் தரும் டாப் 5 பைக்குகளின் விலை, மைலேஜ் மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய விவரங்களை விரிவாக காண்போம்.

PREV
17
75 கி.மீ மைலேஜ் பைக்குகள்

இந்தியாவில் தினசரி பைக் பயன்படுத்துபவர்கள் அதிக மைலேஜ் மற்றும் குறைந்த பராமரிப்பு செலவு கொண்ட பைக்குகளையே விரும்புகின்றனர். பெட்ரோல் விலை உயர்ந்து வரும் நிலையில், ரூ.60,000 முதல் ரூ.80,000 பட்ஜெட்டில் கிடைக்கும் 100cc - 110cc பைக்குகளுக்கான வரவேற்பும் அதிகரித்துள்ளது. நிஜமான சாலைப் பயன்பாட்டில் லிட்டருக்கு 75 கி.மீ வரை மைலேஜ் தரும் டாப் 5 பைக்குகள் குறித்து பார்க்கலாம்.

இதையும் படிங்க : EB Bill : மின் கட்டணம் அதிகமா வந்திருக்கா? காரணம் என்ன? மின்வாரியம் சொல்றத கேளுங்க!

27
1. டிவிஎஸ் ஸ்போர்ட்

பட்ஜெட் பைக்குகளில் மிகவும் குறைவான விலை டிவிஎஸ் ஸ்போர்ட்டுக்குத்தான். இதன் 109.7 cc ET-Fi இன்ஜின், லிட்டருக்கு 70-75 கி.மீ வரை மைலேஜ் தருகிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.59,431 முதல் ரூ.70,200 வரை உள்ளது. நகர டிராஃபிக்கில் ஓட்ட இது சிறந்த பைக்.

இதையும் படிங்க : Panchagraha Rajayoga : மகாலட்சுமி அருளும், பஞ்சகிரக ராஜயோகமும் சேர்ந்து ஜாக்பாட் அடிக்கப் போகும் 5 ராசிகள்!

37
2. ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் / எக்ஸ்டெக்

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் பைக் ஹீரோ ஸ்பிளெண்டர். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.75,141 முதல் ரூ.79,991 வரை. இது லிட்டருக்கு 70-80 கி.மீ வரை மைலேஜ் தருகிறது. இதன் i3S டெக்னாலஜி, டிராஃபிக் சிக்னல்களில் பெட்ரோலை சேமிக்க உதவுகிறது. XTEC வேரியண்ட்டில் டிஜிட்டல் டிஸ்ப்ளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி போன்ற அம்சங்கள் உள்ளன.

இதையும் படிங்க : Baby Food : 6 மாதம் முதல் 1 வயது வரை குழந்தைகள் என்னென்ன சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

47
3. பஜாஜ் பிளாட்டினா 100 / பிளாட்டினா 110

சொகுசான பயணத்திற்கு பிளாட்டினா சீரிஸ் பெயர் பெற்றது. இதன் 'ComforTec' சஸ்பென்ஷன், மேடு பள்ளமான சாலைகளிலும் மென்மையான பயணத்தை உறுதி செய்கிறது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.67,808 முதல் ரூ.75,797 வரை. இது லிட்டருக்கு 70-75 கி.மீ மைலேஜ் தருகிறது. 110cc மாடலில் பாதுகாப்புக்கு ABS ஆப்ஷனும் உண்டு.

இதையும் படிங்க : Ginger : இஞ்சி தோலை ஏன் உரிக்கிறோம்? உண்மை தெரிஞ்சா இனி தூக்கிப் போட மாட்டீங்க!

57
4. ஹோண்டா ஷைன் 100

ஸ்பிளெண்டருக்குப் போட்டியாக ஹோண்டா, தனது ஷைன் பிராண்டை 100cc பிரிவில் களமிறக்கியுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.64,900 முதல் ரூ.65,996 வரை. இது லிட்டருக்கு 65-75 கி.மீ மைலேஜ் தருகிறது. eSP டெக்னாலஜி இருப்பதால், பைக் ஸ்டார்ட் ஆவதுகூடத் தெரியாது. அதிர்வுகள் இல்லாத மென்மையான பயண அனுபவத்தை இது வழங்குகிறது.

இதையும் படிங்க : குழந்தைகளுக்கான 6 அட்டகாசமான சில்வர் காப்பு டிசைன்கள்!

67
5. ஹீரோ ஹெச்.எஃப் டீலக்ஸ்

ஸ்பிளெண்டரை விடக் குறைந்த விலையில், அதே நம்பகமான இன்ஜின் வேண்டுமென்றால் ஹீரோ HF டீலக்ஸ் சரியான தேர்வு. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.59,998 முதல் ரூ.68,500 வரை. இது லிட்டருக்கு 65-70 கி.மீ மைலேஜ் தருகிறது. இதில் உள்ள xSens ஃபியூயல் இன்ஜெக்‌ஷன் சிஸ்டம், எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்துகிறது.

இதையும் படிங்க : Dosa : தோசை கல்லுல ஒட்டாம, ரவுண்டா, மொறு மொறுன்னு சுடுறது எப்படி? தோசை மாஸ்டரின் 8 டிப்ஸ் இதோ!

77
உங்கள் தேவைக்கு எந்த பைக் சிறந்தது?
  • அதிக மைலேஜ், நல்ல ரீசேல் மதிப்பு: ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ்
  • மேடு பள்ளங்களில் சிறந்த சொகுசு: பஜாஜ் பிளாட்டினா
  • மிகக் குறைந்த ஆரம்ப விலை: டிவிஎஸ் ஸ்போர்ட்
  • ஸ்மூத்தான இன்ஜின் செயல்பாடு: ஹோண்டா ஷைன் 100

இதையும் படிங்க : Kitchen : கேஸ் அடுப்புக்கு பக்கத்தில் இந்த 7 பொருட்களை வைக்காதீங்க! சின்ன தவறு பெரிய பிரச்சினையாகலாம்!

Read more Photos on
click me!

Recommended Stories