Maruti Brezza Facelift: ரூ.7.40 லட்சத்தில் புதிய பிரெஸ்ஸா.. விலை, வேரியன்ட், புதிய அம்சங்கள் முழு விவரம்!

Published : Jul 26, 2026, 05:55 PM IST

Maruti Brezza Facelift: 2026 மாருதி சுசுகி பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. எந்த வேரியண்ட் யாருக்கு பொருத்தமானது, அதன் விலை மற்றும் முக்கிய அம்சங்கள் என்ன என்பதை விரிவாகப் பார்ப்போம்.

PREV
15
புதிய மாருதி சுஸுகி பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட்

சப்-காம்பாக்ட் எஸ்யூவி செக்மென்ட்டில் கலக்கி வரும் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா, இப்போது 2026 ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனில் களமிறங்கியுள்ளது. அறிமுகமாகி நான்கு ஆண்டுகள் ஆன நிலையில், புதிய டிசைன், நவீன வசதிகளுடன் இந்த அப்டேட் வந்துள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் ஆரம்ப விலை ரூ. 7.40 லட்சம். டாப் வேரியன்ட் விலை ரூ. 12.89 லட்சம். LXi, VXi, ZXi, மற்றும் ZXi+ என நான்கு வேரியன்ட்களில் பெட்ரோல், டர்போ-பெட்ரோல், மற்றும் CNG ஆப்ஷன்களில் இது கிடைக்கிறது.

25
பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட்டில் இன்ஜின் ஆப்ஷன்கள்

2026 பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட்டின் முக்கிய சிறப்பம்சமே, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 1.0-லிட்டர் பூஸ்டர்ஜெட் டர்போ பெட்ரோல் இன்ஜின்தான். இது 110 PS பவரையும், 170 Nm டார்க்கையும் தருகிறது. இதனுடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது ஆப்ஷனாக, 1.5-லிட்டர் K15C பெட்ரோல் இன்ஜின் உள்ளது. இது 103 PS பவரையும், 139 Nm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது. இதில் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் உள்ளன. CNG மாடல் ஒரு கிலோவுக்கு 26.90 கி.மீ மைலேஜ் தருவதாக மாருதி கூறுகிறது.

குறைந்த விலையில் அதிக மைலேஜ்.. பட்டையை கிளப்பும் ஹூண்டாய் ஆரா சிஎன்ஜி.. வசதிகள் மாஸ் காட்டுது

35
டிசைன் மற்றும் இன்டீரியர்

புதிய டூயல் LED புரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், புதிய கிரில், ஸ்போர்ட்டியான அலாய் வீல்கள் என வெளிப்புறத் தோற்றம் புதுப்பொலிவுடன் இருக்கிறது. காரின் உள்ளே பிரவுன் மற்றும் பிளாக் தீம் தொடர்கிறது. டாப் ZXi+ வேரியன்ட்டில் லெதரெட் சீட்கள், 64-வண்ண ஆம்பியன்ட் லைட்டிங், முன்பக்க வென்டிலேட்டட் சீட்கள், கூல்டு கிளவ் பாக்ஸ் போன்ற பிரீமியம் வசதிகளை மாருதி வழங்கியுள்ளது. மேலும், ஹெட்-அப் டிஸ்ப்ளே மற்றும் புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதியும் இதில் உள்ளது.

45
பாதுகாப்பு அம்சங்கள்

டாப் ZXi+ வேரியன்ட்டில் 10.1-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இதில் ஆர்கமிஸ் சரவுண்ட் சவுண்ட், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே போன்ற வசதிகள் உள்ளன. பாதுகாப்புக்கு, பாரத் NCAP சோதனையில் 5-ஸ்டார் ரேட்டிங் பெற்ற இந்த காரில் 6 ஏர்பேக்குகள், ஹில் ஹோல்ட் அசிஸ்ட் போன்றவை உள்ளன. டர்போ வேரியன்ட்களில் பிளைண்ட் ஸ்பாட் வார்னிங் போன்ற லெவல் 1 ADAS அம்சங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

55
எந்த வேரியன்ட் வாங்குவது சிறந்தது?

எந்த வேரியன்ட்டை வாங்குவது என்ற குழப்பத்தில் இருந்தால், ZXi வேரியன்ட் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இதில் எலக்ட்ரிக் சன்ரூஃப், வயர்லெஸ் சார்ஜர், ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல் போன்ற அத்தியாவசிய வசதிகள் அனைத்தும் கிடைக்கின்றன. உங்களுக்கு 10.1-இன்ச் டிஸ்ப்ளே, 360-டிகிரி கேமரா, வென்டிலேட்டட் சீட்கள் போன்ற பிரீமியம் வசதிகள் வேண்டுமென்றால் ZXi+ வேரியன்ட்டைத் தேர்ந்தெடுக்கலாம். டாடா நெக்ஸான், ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா XUV 3XO, கியா சோனெட் போன்ற கார்களுக்கு புதிய பிரெஸ்ஸா கடும் போட்டியாக இருக்கும்.

லிட்டருக்கு 70 கி.மீ மைலேஜ் தரும் பைக்கின் விலையை அதிரடியாக குறைத்த ஹீரோ நிறுவனம்

Read more Photos on
click me!

Recommended Stories