ஹீரோ HF டீலக்ஸ் கேன்வாஸ் பிளாக் எடிஷன், 2023 ஜூன் மாதம்தான் மார்க்கெட்டுக்கு வந்தது. அப்போது அதன் விலை ₹60,760 ஆக இருந்தது. பின்னர், பலமுறை விலை உயர்த்தப்பட்டு ₹67,634-க்கு விற்பனை செய்யப்பட்டது. இப்போது அறிவிக்கப்பட்டுள்ள விலை, அறிமுக விலையை விடவும் குறைவு என்பதுதான் இதன் சிறப்பம்சம்.
ஆனால், இந்த விலை குறைப்பு இந்தியா முழுவதும் கிடைக்காது. தற்போதைக்கு, உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த புதிய விலையின் பலன் கிடைக்கும். மற்ற மாநிலங்களுக்கு இந்த ஆஃபர் எப்போது வரும் என்பது பற்றி நிறுவனம் இன்னும் எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை.