Honda QC3 : 151 கி.மீ ரேஞ்ச், சூப்பர் ஃபீச்சர்ஸ்! ஹோண்டாவின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!

Published : Jul 26, 2026, 01:53 PM IST

Honda QC3 : இந்திய சந்தையில் ஹோண்டா தனது புதிய QC3 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 151 கி.மீ வரை செல்லும் இந்த ஸ்கூட்டரில், 32 லிட்டர் சீட் ஸ்டோரேஜ், ஸ்மார்ட் கீ சிஸ்டம் போன்ற நவீன வசதிகள் உள்ளன.

PREV
15
புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெட்ரோல் விலை உயர்வால், மக்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற, நல்ல மைலேஜ் தரும் வாகனங்களை வாங்க விரும்புகிறார்கள். இந்த நிலையில், ஹோண்டா நிறுவனம் தனது புதிய QC3 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
25
151 கி.மீ வரை IDC ரேஞ்ச்
இந்தியாவில் தினமும் அலுவலகம், கல்லூரிக்குச் செல்லும் நகரவாசிகளை மனதில் வைத்து இந்த ஸ்கூட்டரை ஹோண்டா வடிவமைத்துள்ளது. ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 151 கி.மீ வரை (IDC ரேஞ்ச்) பயணிக்க முடியும். இதனால், அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டிய கவலை இல்லை என ஹோண்டா கூறுகிறது.
35
பேட்டரி சார்ஜிங் நேரம்
Honda QC3 ஸ்கூட்டரில் 3kWh ஃபிக்ஸட் லித்தியம்-அயன் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. தினமும் 30 முதல் 40 கி.மீ வரை பயணிப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும் என நிறுவனம் கூறுகிறது. இதன் பேட்டரி, 0-விலிருந்து 80% சார்ஜ் ஆக 2 மணி 40 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது. முழுமையாக சார்ஜ் ஆக 4 மணி நேரம் ஆகும்.
45
32 லிட்டர் அண்டர் சீட் ஸ்டோரேஜ்
Honda QC3 ஸ்கூட்டரின் மற்றொரு சிறப்பு, இதன் 32 லிட்டர் அண்டர்-சீட் ஸ்டோரேஜ் வசதி. இதில் ஹெல்மெட், பை மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை எளிதாக வைத்துக்கொள்ளலாம். புதிய ஸ்கூட்டர் வாங்கும் திட்டத்தில் இருந்தால், இதை கவனிக்கத் தவறாதீர்கள்.
55
விலை எவ்வளவு?
இந்த ஸ்கூட்டரில் ஸ்மார்ட் கீ சிஸ்டம், 5-இன்ச் TFT டிஸ்ப்ளே போன்ற நவீன அம்சங்கள் உள்ளன. கனெக்டட் ஃபீச்சர்ஸ் மற்றும் நேவிகேஷன் வசதியும் இருப்பதால், ஓட்டுநர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தை இது கொடுக்கும். QC3 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,20,000. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்யப்படும்.
Read more Photos on
click me!

Recommended Stories