Astrology: இந்த 4 ராசிக்காரங்க சிறந்த துப்பறிவாளர்களாம்.! இவங்ககிட்ட ஒரு பொய்யை கூட மறைக்க முடியாது.!

Published : Sep 12, 2025, 02:05 PM IST

zodiac signs with detective skills Astrology : ஜோதிடத்தின்படி சில ராசிக்காரர்கள் இயல்பிலேயே துப்பறியும் திறன் கொண்டிருப்பார்கள். இவர்களிடமிருந்து எந்த ஒரு விஷயத்தையும் நம்மால் மறைக்க முடியாது. அந்த ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
15
துப்பறியும் திறன் கொண்ட ராசிகள்

ஜோதிடத்தின்படி ஒவ்வொரு ராசியும் தடுத்துவமான பண்புகளையும், திறமைகளையும் கொண்டு விளங்குகின்றன. சில ராசிக்காரர்கள் தங்கள் கூர்மையான அறிவு, தீவிரமான கவனிப்பு திறன் மற்றும் பகுப்பாய்வு மனப்பாங்கு ஆகியவற்றால் இயற்கையாகவே துப்பறியும் திறனில் சிறந்து விளங்குகின்றனர். இவர்கள் மர்மங்களை அவிழ்ப்பதிலும், மறைந்திருக்கும் உண்மைகளை வெளிக் கொண்டு வருவதிலும் தனித் திறமை கொண்டவர்கள். இந்த கட்டுரையில் துப்பறியும் திறன் கொண்ட நான்கு ராசிகள் யார் என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

25
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் ஆழமான உள்ளுணர்வு, உளவியல் புரிதல் ஆகியவற்றை இயற்கையாகக் கொண்டவர்கள். இவர்களின் மனம் ஒரு மர்மத்தை ஆராய்ந்து, அதன் ஆழத்தை அறியும் வரை ஓயாது. இவர்கள் மிகவும் கவனிப்பாகவும், விவரங்களை உன்னிப்பாக அவதானிப்பார்களாகவும் இருப்பார்கள். இவர்களால் மற்றவர்களின் மறைவான எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் எளிதில் புரிந்து கொள்ள முடியும்.

இவர்கள் ஒரு விஷயத்தை முழுமையாக ஆராய்ந்து அதன் உண்மையை வெளிக்கொண்டுவரும் வரை தங்கள் முயற்சியை கைவிட மாட்டார்கள். இவர்களின் உறுதியும், ஆர்வமும் மிக சிக்கலான மர்மங்களை கூட தீர்க்க உதவுகிறது. இவர்களிடம் நீங்கள் ஒரு பொய்யை மறைக்க நினைத்தால் நீங்கள் தான் ஏமாந்து தான் போவீர்கள்.

35
கன்னி

கன்னி ராசிக்காரர்கள் பகுப்பாய்வு மனப்பான்மை மற்றும் விவரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயல்பு கொண்டவர்கள். ஒரு சிறு விஷயத்தைக்கூட உன்னிப்பாக கவனித்து அதில் மறைந்திருக்கும் தகவல்களை எளிதில் கண்டறிவார்கள். ஒரு துப்பறிவாளருக்கு தேவையான முறையான அணுகுமுறையும், நுண்ணறிவும் கன்னி ராசிக்காரர்களுக்கு இயல்பாகவே உள்ளது.

இவர்கள் தர்க்க ரீதியாக சிந்திப்பவர்கள் மற்றும் சிக்கலைத் தீர்க்கும் திறன் கொண்டிருப்பார்கள். இதன் காரணமாக எந்த மர்மத்தையும் இவர்களால் அவிழ்க்க முடியும். இவர்கள் ஒரு விஷயத்தை ஆராய்ந்து, ஆதாரங்களுடன் ஒப்பிட்டு அவற்றை ஒழுங்காக இணைத்து தெளிவான முடிவுகளை எடுப்பார்கள். மேலும் இவர்கள் அறிவு கிரகமான புதனால் ஆளப்படுவதால் இவர்களுக்கு இயல்பாகவே புத்தி கூர்மையும், துப்பறியும் திறனும் உண்டு.

45
மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் புதன் ஆதிக்கம் செலுத்தும் மற்றொரு ராசிக்காரர்கள். புதன் பகவான் புத்தி கூர்மை, அறிவு போன்றவற்றின் காரகராக விளங்குகிறார். இதன் காரணமாக மிதுன ராசிக்காரர்களும் சிறந்த துப்பறிவாளர்களாக விளங்குகின்றனர். இவர்களின் ஆழமான உணர்ச்சி, அறிவு மற்றவர்களின் உணர்வுகளையும் நோக்கங்களையும் புரிந்து கொள்ள உதவுகிறது. மேலும் இவர்கள் வழக்கத்திற்கு மாறான வழிகளில் சிந்தித்து சிக்கல்களை அணுகுகின்றனர்.

தங்கள் உள்ளுணர்வை பெரிதும் மதிக்கும் இவர்கள் ஒரு விஷயத்தை வெவ்வேறு கோணத்தில் பார்க்கின்றனர். தகவல்களை விரைவாக செயலாக்குவதுடன், பல கோணங்களில் இருந்து சூழ்நிலைகளை பகுப்பாய்வு செய்து, அதில் தீர்வுகளையும் கண்டறிகின்றனர். இதன் காரணமாக மிதுன ராசிக்காரர்கள் இயல்பிலேயே மர்மத்தை கண்டறியும் திறன் கொண்டு விளங்குகின்றனர்.

55
கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் எப்போதும் புதுமையாக சிந்திப்பவர்கள். இவர்களின் தனித்துவமான கண்ணோட்டம், கூர்மையான அறிவுத்திறன், தொலைநோக்குப் பார்வை ஆகியவை பகுப்பாய்வு செய்யும் திறனை அவர்களுக்கு வழங்குகிறது. கும்ப ராசிக்காரர்கள் எந்த ஒரு பணியையும் தீவிரமாகவும், பொறுப்புணர்வாகவும் அணுகுவார்கள். இவர்களின் ஆதாரங்களை மதிப்பிடும் திறன், நடைமுறை ஆகியவை புதிர்களை அவிழ்க்க உதவுகிறது.

இவர்கள் எப்போதும் ஒரு படி முன்னால் நின்று சூழலை முழுமையாக ஆராய்ந்து முடிவுகளை எடுப்பார்கள். இவர்கள் ஒருவரின் மர்மத்தை பல கண்ணோட்டங்களில் பார்க்கும் திறன் பெற்றுள்ளனர். இதன் காரணமாக கும்ப ராசிக்காரர்கள் ஒரு நபரை பார்த்த உடனேயே அவர்கள் குறித்த ஒரு மேம்போக்கான புரிதலை ஏற்படுத்தி, அவர்கள் குறித்த தகவல்களை சேகரித்து விடுவார்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories