Zodiac signs: இந்த 5 ராசிக்காரங்க சின்ன வயசுல கஷ்டப்பட்டாலும், 40 வயசுக்கு மேல கோடீஸ்வரரா மாறுவங்களாம்.! உங்க ராசி இருக்கா?

Published : Jan 01, 2026, 02:37 PM IST

Zodiac signs who will become millionaire after 40: ஜோதிடத்தின் படி சில ராசியில் பிறந்தவர்களுக்கு இளமை காலத்தில் போராட்டங்கள் அதிகமாக இருந்தாலும், 40 வயதிற்குப் பின்னர் அதிர்ஷ்ட காற்று வீசத் தொடங்கும். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
16
40 வயதிற்குப் பின் கோடீஸ்வர யோகம் பெறும் ராசிகள்

நாம் வாழ்க்கையில் எத்தனையோ மனிதர்களை சந்தித்து இருப்போம். சிலர் ஆரம்பம் முதலே செல்வந்தர்களாக வளம் வருவார்கள். சிலர் தங்கள் கடின உழைப்பால் ஒரு வயதை எட்டிய பிறகு செல்வந்தர்களாக மாறுவார்கள். ஜோதிடத்தின்படி சில ராசிக்காரர்கள் இளமையில் கஷ்டப்பட்டாலும் 40 வயதிற்கு பின்னர் செல்வந்தர்களாக மாறும் யோகம் கொண்டவர்களாம். குறிப்பாக மந்த கதி கிரகமான சனி பகவானின் ஆதிக்கம் கொண்ட ராசிகளுக்கு பிற்கால வாழ்க்கை மிகவும் செழிப்பாக அமையும். 40 வயதுக்கு மேல் செல்வந்தராகும் யோகம் கொண்ட முக்கிய ராசிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

26
மகரம்

மகர ராசியின் அதிபதியாக சனி பகவான் விளங்கி வருகிறார். மகர ராசிக்காரர்கள் இளமையில் மிகக் கடுமையான தடைகளையும், சவால்களையும் சந்திப்பார்கள். கடின உழைப்பை வழங்கியபோதிலும் அவர்களால் ஜொலிக்க முடியாது. ஆனால் அந்த அனுபவங்களைக் கொண்டு 40 வயதிற்கு மேல் இவர்கள் நிலையான சாம்ராஜியத்தை உருவாக்குவார்கள். இளமைக்காலத்தில் இழந்த செல்வங்களை விட 40 வயதிற்கு பின்னர் பல மடங்கு செல்வத்தை ஈட்டுவார்கள்.

36
கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் அறிவுப்பூர்வமாக சிந்திப்பவர்கள். இவர்கள் தற்காலிக சகபோகங்களை விரும்ப மாட்டார்கள். இவர்களின் திட்டங்கள் என்பது நீண்ட கால பலனை நோக்கியதாகவே இருக்கும். 40 வயதிற்கு மேல் இவர்கள் தொழில் அல்லது வேலையில் மிகப்பெரிய திருப்புமுனையை சந்திப்பார்கள். வாழ்க்கையின் பிற்பகுதியில் எதிர்பாராத சொத்து சேர்க்கை மற்றும் சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்து இவர்களைத் தேடி வரும்.

46
கன்னி

புதன் பகவானை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்கள் மிகவும் புத்திக்கூர்மை கொண்டவர்கள். இவர்கள் சிறந்த நிதி மேலாண்மை திறனுடனும் விளங்குகிறார்கள். சிறுக சிறுக சேர்த்த செல்வத்தைக் கொண்டு 40 வயதிற்கு பின்னர் இவர்கள் மிகப்பெரிய முதலீடாக மாற்றி அதன் மூலம் பலன் பெறுவார்கள். வாழ்க்கையின் பிற்பகுதியில் வியாபாரம் மற்றும் முதலீடுகள் மூலம் பெரும் லாபத்தை அடைவார்கள்.

56
ரிஷபம்

சுக்கிர பகவானின் ஆதிக்கம் கொண்ட ரிஷப ராசிக்காரர்கள் ஆடம்பரத்தை விரும்புவர்களாக இருப்பார்கள். இளமையில் இவர்கள் நிதி நெருக்கடிகள் அல்லது கஷ்டங்களை அனுபவித்தாலும் 40 வயதிற்குப் பின்னர் நிலையான வருமானமும், சொகுசு வாழ்க்கைக்கான யோகமும் இவர்களுக்கு கிடைக்கும். நிலம், வீடு போன்ற அசையா சொத்துக்கள் மூலம் இவர்களின் வருமானம் பெருகும்.

66
விருச்சிகம்

விருச்சிக ராசியினர் எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்களாக இருக்கின்றனர். வாழ்க்கையின் பல சவால்களை சந்தித்த பிறகு 40 வயதிற்கு மேல் இவர்களுக்கு ராஜயோகம் கிடைக்கும். இவர்கள் எடுக்கும் துணிச்சலான முடிவுகள் இவர்களை கோடீஸ்வரர்களாக மாற்றும். வாழ்க்கையின் பிற்பகுதியில் இவர்களுக்கு இருந்த தடைகள் நீங்கி செல்வம் தானாக தேடி வரும்.

குறிப்பு: 40 வயதிற்கு மேல் ஒருவர் பணக்காரர் ஆவதற்கு ராசி மட்டுமல்லாது ஜாதகத்தில் உள்ள அமைப்புகளும் முக்கியம். ஜாதகத்தில் 2 ஆம் இடமான தன ஸ்தானம், 9 ஆவது இடமான பாக்கிய ஸ்தானம், 11 வது இடமான லாப ஸ்தானம் ஆகியவற்றின் அதிபதிகளின் தசா புத்தி 40 வயதிற்கு மேல் வரும் பொழுது அபரிமிதமான செல்வம் சேரும். அதேபோல் ஒருவரின் ஜாதகத்தில் சனி பகவான் வலுவாக இருந்தால் ஆரம்பத்தில் சோதனைகளைக் கொடுத்தாலும், முடிவில் நிலைத்து நிற்கக்கூடிய செல்வத்தை தருவார்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories