
கடன் என்பது எத்தகைய உறவானாலும் அதை பிரிக்கும் குணம் கொண்டது. தேவைக்காக சிலர் பணத்தை கடனாகப் பெறுகின்றனர். ஆனால் அதை சரியான நேரத்தில் திருப்பி அடைப்பதில்லை. கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்கும் பொழுது, பிரச்சனை ஏற்பட்டு உறவே முறியும் சூழலும் ஏற்படுகிறது. குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் கடனை வாங்கிவிட்டு திருப்பி செலுத்தவே மாட்டார்களாம். அந்த ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
மீன ராசிக்காரர்களை குரு பகவானுடன் இணைந்து நெப்டியூன் கிரகமும் ஆள்கிறது. ஜோதிடத்தின் படி நெப்டியூன் கிரகம் கற்பனை உலகுடன் தொடர்புடைய கிரகமாகும். மீன ராசிக்காரர்கள் கற்பனை மற்றும் மறதிகளுக்குப் பெயர் பெற்றவர்கள். இவர்கள் தங்கள் வாங்கிய கடன்களை மறந்து விடுகின்றனர். இவர்கள் வேண்டுமென்றே வாங்கிய கடனை திருப்பி அடைக்காமல் இருப்பதில்லை. ஆனால் தங்கள் மறதி குணத்தால் அவர்கள் கடனை அடைப்பதில்லை் இவர்கள் வாங்கும் கடனை மட்டுமல்ல, தான் கொடுத்த கடனையும் மறக்கும் அளவிற்கு மறதிக்குப் பெயர் பெற்றவர்களாக விளங்குகின்றனர்.
தனுசு ராசிக்காரர்கள் குரு பகவானால் ஆளப்படுபவர்கள். இவர்கள் சாகசம் புரிய வேண்டும் என்கிற ஆர்வம் கொண்டவர்கள் இவர்கள் சேமிப்புகளில் அதிக ஆர்வம் காட்ட மாட்டார்கள். எதிர்பார்ப்புகள் அதிகம் இல்லாமல் இருப்பார்கள். பல சமயங்களில் அலட்சியமாக இருப்பார்கள். அந்த வகையில் வாங்கிய கடனை திருப்பி அடைக்க வேண்டும் என்கிற பொறுப்பையும் அவர்கள் மறந்து விடுகின்றனர். கடன் வாங்கும் பொழுது எப்படியாவது கொடுத்து விடுகிறேன் என்று சொல்லி கடனை வாங்குவார்கள். ஆனால் இவர்களின் அலட்சியப் போக்கு காரணமாக, கடன் தானாக அடையும் சூழல் வரும் என்று காத்திருப்பர்.
மிதுன ராசிக்காரர்கள் புதன் பகவானால் ஆளப்படுபவர்கள். புதன் புத்தி கூர்மைஔ பேச்சுத்திறன், தகவல் தொடர்பு ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். மிதுன ராசிக்காரர்கள் தங்களது தேவைகளுக்காக பிறரிடம் இனிமையான வார்த்தைகளை பேசுவார்கள். கடன் தேவைப்படும்பொழுது பிறரிடம் இனிமையாகப் பேசி கடன் பெற்றுக் கொள்வார்கள். ஆனால் அதை திருப்பி கேட்கும் பொழுது தனது பேச்சாற்றலைப் பயன்படுத்தி தப்பித்து விடுவார்கள். மிதுன ராசியினரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு, அதை திருப்பி வாங்குவது என்பது சவாலான காரியம் ஆகும்.
சிம்ம ராசியினர் சூரிய பகவானால் ஆளப்படுபவர்கள். இவர்கள் இயல்பிலேயே ஆளுமைத் திறனும், ஆதிக்கம் செலுத்தும் பண்பும் கொண்டவர்கள். இவர்கள் தங்கள் கௌரவத்திற்காக சில சமயங்களில் கடன் வாங்கி செலவு செய்வார்கள். கடன் கொடுத்தவர்கள் திருப்பி கேட்பதற்கு முன்னதாகவே அடைக்க வேண்டும் என்கிற எண்ணம் இவர்களிடம் இருக்கும். ஆனால் இவர்கள் செலவுகளை கணக்கில்லாமல் செய்வதன் காரணமாக கடனை திருப்பி அடைக்க முடியாத சூழல் ஏற்படும். ஒரு கடனை சமாளிக்க மீண்டும் மீண்டும் கடன் வாங்கி தவிப்பர். கௌரவத்திற்காக கடன் வாங்கும் இவர்களின் குணம் இவர்களை கடனாளியாக ஆக்குகிறது.
கும்ப ராசிக்காரர்கள் சுதந்திரமானவர்கள் மற்றும் தன்னால் தனித்து எந்த ஒரு செயலையும் செய்ய முடியும் என்று நினைப்பவர்கள். தங்கள் தேவைகளுக்காக பிறரிடம் கடன் கேட்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பார்கள். ஆனால் கடன் வாங்கும் சூழல் உருவாகும் போது, கடன் வாங்குவதற்கு முன்பே அதை அடைப்பதற்கான வழிகளையும் கண்டறிகின்றனர். ஆனால் இவர்களை ஆளும் கிரகமான யுரேனஸ் இவர்களுக்கு அதிக பொறுப்புகளை கொடுத்து விடுகிறது. தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கும் சூழலில் இவர்கள் பழைய கடன்களை அடைக்க முடியாமல் தவிக்கின்றனர்.
மேஷ ராசிக்காரர்கள் செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுபவர்கள். இவர்கள் தன்னம்பிக்கை மிக்கவர்கள். தைரியசாலிகள் மற்றும் உற்சாகமானவர்கள். இவர்கள் உடனடியாக திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்கள். இதன் காரணமாக சில சமயங்களில் பணப் பிரச்சனைகளில் சிக்கிக் கொள்கின்றனர். எந்த காரியம் ஆனாலும் எவ்வளவு செலவழித்தாவது அதை செய்து விட வேண்டும் என்கிற இவர்களது ஆர்வம் இவர்களை கடனாளி ஆக்குகிறது. இவர்களிடம் பணம் கொடுத்தால் அதை திரும்பி பெறுவது கடினம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)