சிவன், விநாயகர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு உகந்த எருக்கம்பூ, ஆன்மீக மற்றும் மருத்துவ முக்கியத்துவம் வாய்ந்தது. கிரக தோஷ நிவாரணம், பாவ விமோசனம் என பல பலன்களை அளிக்கும் இந்த மலர், சூரிய பகவானுடனும் நெருங்கிய தொடர்புடையது.
இந்தியாவில் பொதுவாக காணப்படும் தாவரங்களில் ஒன்றாக எருக்கு செடி திகழ்கிறது. வெள்ளை மற்றும் ஊதா நிற மலர்களைக் கொண்ட இந்த செடிகள், மணமும் அழகும் குறைவாக இருந்தாலும், ஆன்மீக மற்றும் மருத்துவ முக்கியத்துவம் மிகுந்தவையாகும். இலை, மலர், வேர், பட்டை என எருக்கின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் நிறைந்தவையே.
25
சிவ பரிவாரங்களுக்கு உகந்த மலர்.!
சிவபெருமானுக்கும், விநாயகருக்கும் உகந்த அஷ்டபுஷ்பங்களில் ஒன்றாக எருக்கம்பூ குறிப்பிடப்படுகிறது. சங்க இலக்கிய காலத்திலேயே இந்த மலர் வெற்றியின் அடையாளமாகக் கருதப்பட்டு, வீரர்கள் போரில் வெற்றி பெற்றபின் எருக்க மாலைகளைத் தரித்ததாகச் சான்றுகள் உள்ளன.
கிரக தோஷ நிவாரணம்
எருக்கு செடியிலிருந்து வெளிப்படும் ஆற்றல் காற்றில் கலந்து நச்சு கிருமிகளை அழிக்கக் கூடியது என்ற நம்பிக்கை உண்டு. அதனால் பழங்காலத்தில் வீடு, வணிக இடங்களில் எருக்கந்தண்டுகளை வைப்பது வழக்கமாக இருந்தது. மேலும், எருக்கு வேரால் ஆன விநாயகர் உருவங்களை வழிபட்டால் கிரக தோஷங்கள் குறையும் என நம்பப்படுகிறது.
35
ஆழகான மலரிலன் ஆன்மிக பயன்கள்
வெள்ளெருக்கு மலர்களை சிவபெருமானுக்கு சமர்ப்பித்து வழிபட்டால், பாவங்களும் பயங்களும் நீங்கி சனி பகவானின் அருளும் கிடைக்கும். விநாயகர் சதுர்த்தியில் விநாயகருக்கு எருக்க மாலை சாற்றினால், கடினமான பிரச்சினைகள் எளிதில் அகன்றுவிடும். அதுபோல பைரவருக்கு அஷ்டமி தினங்களில் எருக்கு விளக்கேற்றி வழிபடுவதும் சிறப்பான பலனை அளிக்கும்.
தலவிருட்சம் மற்றும் சூரிய தொடர்பு
தமிழகத்தின் பல சிவாலயங்களில் எருக்கு தலவிருட்சமாக வணங்கப்படுகிறது. குறிப்பாக சூரிய பகவானுடன் இந்தத் தாவரத்துக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. "அர்க்" என்ற பெயரால் அறியப்படும் எருக்கினால்தான் அர்க்கவனேஸ்வரர் மற்றும் அருக்கன் என்ற பெயர்கள் உருவாகின. தஞ்சை மாவட்டத்தில் உள்ள சூரியனார் கோயிலில் கூட எருக்கின் முக்கியத்துவம் வெளிப்படையாகக் காணப்படுகிறது.
ஆனி மாத பௌர்ணமியில் சிவனுக்கு எருக்கம்பூ சமர்ப்பித்தால் ஆயிரமடங்கு பலன் கிடைக்கும் என புஷ்பபூஜாபத்ததிநூல் கூறுகிறது. அதேபோல் சப்தமி தினங்களில் ஏழு எருக்கு இலைகளை வைத்து சூரிய வழிபாடு செய்தால் கிரகப் பீடைகள் நீங்கும் என நம்பப்படுகிறது.
கவனிக்க வேண்டியவை
இத்தனை சிறப்புகள் இருந்தாலும், வீட்டில் எருக்கு செடியை வளர்ப்பது நல்லதல்ல என்று சாஸ்திரம் கூறுகிறது. மேலும், லட்சுமி பூஜைக்கு எருக்கம்பூ பயன்படுத்தக் கூடாது. ஆனால் சிவாலயங்களில் தினசரி பூஜைகளுக்கு எருக்கம்பூ சமர்ப்பித்தால் பெரும் புண்ணியம் சேரும்.
55
கணபதி வழிபாட்டில் பரிகார மலர்.!
விநாயகருக்கு பிடித்த மலர்களில் ஒன்றான இந்த மலரை சமர்பித்து வழிபட்டால் கணபதி வேண்டிய வரங்களை தந்து அருள்பாலிப்பார். சாலையோரங்களிலும் வாய்க்கால் வரப்புகளிலும் காணப்படும் எருக்கம்பூ ஆன்மீக ரீதியிலும் மருத்துவ ரீதியிலும் தனித்துவம் மிக்க பரிகார மலராக மதிக்கப்படுகிறது என்றால் அது மிகையல்ல.