தனுசு ராசி குருபகவான் உடைய சொந்த வீடாகும். எனவே தனுசு ராசிக்காரர்களுக்கு ஞானம் அதிக அளவில் இருக்கும். இவர்கள் எந்த ஒரு சூழ்நிலையானாலும் தனது சாதுரியத்தால் சமாளித்து வெற்றி காணும் திறன் படைத்தவர்கள். இவர்கள் எந்த ஒரு சவாலையும் வாய்ப்பாக நினைத்து அதை தைரியமாக எதிர்கொள்வார்கள். இவர்களின் இந்த உறுதியான மனநிலை அவர்களை எதிர்க்க முயல்பவர்களை வியப்பில் ஆழ்த்தும். பல்வேறு கலாச்சாரங்கள், மக்களின் மனநிலைகள், சூழ்நிலைகளை புரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள். இந்த புரிதல் அவர்களை எதிர்க்க முயல்பவர்களின் உத்திகளை எளிதில் புரிந்து கொண்டு அதை உடைத்தெறிய உதவுகிறது.
மேலும் தனுசு ராசிக்காரர்கள் சுதந்திரமான மனப்பான்மை கொண்டவர்கள். அவர்கள் தங்கள் பாதையை எப்போதும் தாங்களே தேர்ந்தெடுப்பார்கள். இதன் காரணமாக எதிரிகள் விரிக்கும் வலையில் இவர்கள் எளிதில் சிக்கிக் கொள்வதில்லை. தனுசு ராசிக்காரர்கள் தனது அறிவு, நகைச்சுவை மற்றும் திறந்த மனதுடன் மற்றவர்களை எளிதில் வென்று விடுவார்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)