Astrology: இந்த ராசிக்காரர்களை வெற்றி தேடி வருமாம்.! தோல்வி என்பதே அவர்களுக்கு கிடையாதாம்.!

Published : Sep 05, 2025, 04:36 PM IST

ஜோதிட சாஸ்திரங்களின்படி சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு செல்வமும், வெற்றியும் தாமாக தேடி வரும் என்று கூறப்படுகிறது. அந்த அதிர்ஷ்டசாலிகள் பிறந்த ராசிகள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
16
எளிதாக வெற்றி பெறும் ராசிக்காரர்கள்

நாம் அனைவருமே வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்கிற இலக்குடன் ஓடிக் கொண்டிருக்கிறோம். வெற்றிக்கு கடினமான உழைப்பும், விடாமுயற்சியும் அவசியம். ஆனால் சிலரைத் தேடி வெற்றி தாமாக வரும். சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு இந்த பாக்கியம் உண்டு எனக் கூறப்படுகிறது. அவர்களின் குணங்கள் மற்றும் பண்புகள் காரணமாக வெற்றி அவர்களை தேடி வருவதாக கூறப்படுகிறது. எந்த ராசியில் பிறந்தவர்களை தேடி வெற்றி வரும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

26
மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுபவர்கள். இவர்கள் உறுதியான மனநிலை மற்றும் தைரியத்துடன் பிறந்தவர்கள். எந்த ஒரு சாவாலானாலும் ஒரு கை பார்த்து விடலாம் என்கிற துடிப்புடன் இருப்பவர்கள். இவர்களின் தொலைநோக்குப் பார்வை மற்றவர்களை விட இவர்களை முன்னணியில் இருக்கச் செய்கிறது. மற்றவர்கள் நடந்த பாதையில் செல்லாமல் தனக்கென பாதைகளை உருவாக்குபவர்களாக இருக்கின்றனர். இவர்களின் ஆர்வம் காரணமாக எந்த ஒரு செயலையும் தைரியமாக எடுத்து செய்கின்றனர். இதன் காரணமாக மேஷ ராசிக்காரர்கள் இளம் வயதிலேயே மிகப்பெரிய வெற்றியை அடைகின்றனர்.

36
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் சூரிய பகவானால் ஆளப்படுபவர்கள். இவர்களுக்கு இயல்பிலேயே ஆளுமை மற்றும் தலைமைத்துவ குணங்கள் இருக்கும். இதன் காரணமாக அவர்கள் வெற்றிப் படிகளில் எளிதாக ஏறி முன்னேறி செல்கின்றனர். இவர்கள் பிறரின் வருகைக்காக காத்திருக்காமல் தங்களுடைய வெற்றியை நோக்கிய பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டிருக்கின்றனர். சிம்ம ராசிக்காரர்கள் எந்த விஷயத்தை எடுத்தாலும் அதில் முழு மனதுடன் ஈடுபட்டு வெற்றியை பதிவு செய்கின்றனர். எந்த சவாலாக இருந்தாலும் அதை உறுதியுடன் எதிர்கொள்கின்றனர். இதுவே அவர்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைகிறது.

46
தனுசு

தனுசு ராசிக்காரர்கள் குரு பகவானால் ஆளப்படுபவர்கள். குரு பகவானின் ஆசி இவர்களுக்கு பரிபூரணமாக உண்டு. இவர்கள் வெற்றியின் மீது தீராத ஆர்வம் கொண்டுள்ளனர். புதிய சவால்களை கையில் எடுத்து அதை சாதித்து காட்ட வேண்டும் என்கிற முனைப்பில் இருப்பார்கள். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்கிற விடாப்பிடியான மன உறுதி கொண்டவர்கள். புதிய விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் இவர்களுக்கு அதிகம். இதுவே அவர்களை வெற்றியை நோக்கி வர வைக்கிறது. புதிய கலாச்சாரங்கள், புதிய மொழிகள், புதிய பயணம் ஆகியவற்றை கற்றுக் கொள்ள விரும்புகின்றனர். இதன் காரணமாக அவர்கள் வெற்றியை எளிதாக்குகின்றனர்.

56
மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் சிறந்த பேச்சாற்றல் மற்றும் தகவல் தொடர்பு கொண்டவர்கள். இதன் காரணமாக அவர்கள் யாருடனும் எளிதில் இணைய முடியும். இவர்கள் எந்தத் துறையை தேர்ந்தெடுத்தாலும், அதில் எளிதில் வெற்றியை காண்பார்கள். ஒருவருடன் உணர்ச்சி ரீதியான பிணைப்பு அல்லது தொழில் ரீதியான பிணைப்பை ஏற்படுத்திக் கொள்வதில் வல்லவர்கள். ஒரு வலுவான வளையமைப்பை நிறுவி அதில் தலைவராக மாறுகின்றனர். அவர்களின் பேச்சு திறமை மற்றும் தகவல் தொடர்பு திறமையால் வெற்றி எளிதில் அவர்களை வந்து அடைகிறது.

66
துலாம்

துலாம் ராசிக்காரர்கள் எத்தகைய சூழலானாலும் நிதானத்தை கடைபிடிப்பவர்கள். எவ்வளவு குழப்பமான அல்லது சவாலான சூழலிலும் சமநிலையை பேணும் திறனை கொண்டுள்ளனர். சிக்கலான பிரச்சனைகளை தீர்ப்பதிலும் வல்லவர்கள். இரு தரப்பினரையும் சமமாக பாவித்து மோதல்களை தவிர்த்து, நல்லிணக்கத்தை மீட்டெடுக்க அவர்கள் விரும்புகின்றனர். மோதல்களை விரும்பாத தன்மை, சமநிலையான பார்வை, நேர்மையான தீர்வுகள் மூலம் அவர்கள் வாழ்வில் வெற்றியை தனதாக்கிக் கொள்கின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories