தனுசு ராசிக்காரர்கள் சாகச மனப்பான்மை கொண்டவர்கள். சுதந்திரத்தை விரும்புபவர்கள். புதிய அனுபவங்களை தேடி பயணிப்பவர்கள். இவர்கள் தங்கள் உற்சாகத்திற்காக பணத்தைப் பற்றி கவலைப்படாமல் செலவழிப்பார்கள். புதிய இடங்களுக்கு செல்வது, புதிய அனுபவங்களை கற்றுக் கொள்வது, தரமான நேரத்தை செலவிடுவதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவிடுவார்கள்.
எதிர்காலத்தைப் பற்றி அதிகம் சிந்திக்காமல் அந்த தருணத்தில் தனக்கு தேவையான சந்தோஷத்தை கொடுக்கும் விஷயங்களை உடனடியாக செய்து முடிக்க விரும்புவார்கள். இவர்கள் பணத்தை தங்களுக்கு அனுபவங்களை வாங்கி கொடுக்கும் ஒரு கருவியாக மட்டுமே பார்ப்பார்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)