ஜோதிடத்தின் படி சனி பகவான் நீதிமான் ஆவார். அவர் கஷ்டங்களை கொடுத்தாலும் அது கடந்த கால கர்மங்களுக்கு ஏற்ப உங்களை மேலும் வலுப்படுத்துவதற்காகவே இருக்கும். சனி பகவான் தரும் சவால்களை எதிர்கொள்வதற்கு கடின உழைப்பு மற்றும் ஒழுக்கத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். நேர்மையாக உழைப்பவர்களுக்கு சனி பகவான் நல்ல பலன்களைத் தருவார். பொறுமையை கடைப்பிடிப்பது மிகவும் முக்கியம். ஆஞ்சநேயர் வழிபாடு, சனீஸ்வர வழிபாடு ஆகியவை சனியின் தாக்கத்தை குறைக்க உதவும். ஏழைகளுக்கு உதவுவது, அன்னதானம் வழங்குவது ஆகியவை நேர்மறை பலன்களைக் கூட்டும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)