Astrology: இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பொய்யா பேசுவாங்களாம்.! உங்க ராசி இருக்கா?

Published : Nov 28, 2025, 02:17 PM IST

Zodiac signs always speaks lie: ஜோதிடத்தின்படி சில ராசிக்காரர்கள் மற்றவர்களை காட்டிலும் அதிகமாக பொய் பேசுபவர்களாக இருப்பார்களாம். அந்த ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
15
அதிகம் பொய் பேசும் ராசிகள்

மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய அடிப்படை குணம் உண்மையைப் பேசுவது. ஆனால் சிலர் வாயைத் திறந்தாலே சகஜமாக பொய் பேசுவார்களாம். சிலர் தேவைப்படும் இடங்களில் கூட உண்மையை பேசாமல் பொய்களை பேசி சிக்கலில் மாட்டிக் கொள்வதும் உண்டு. ஜோதிட ரீதியாக சில ராசியில் பிறந்தவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக பொய் பேசுவது அல்லது உண்மைக்குப் புறம்பான தகவல்களை சொல்லும் போக்கு உடையவர்களாக கருதப்படுகின்றனர். அத்தகைய ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

25
மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் புதன் பகவானால் ஆளப்படுபவர்கள். இவர்கள் இயல்பிலேயே பேச்சாற்றல் மற்றும் சமயோசித புத்தி கொண்டவர்கள். இது இவர்களின் பலம் என்ற போதிலும் சில சமயம் இதை தங்கள் தேவைக்காக பயன்படுத்திக் கொள்வார்கள். இவர்கள் இக்கட்டான சூழலில் இருந்து தப்பிப்பதற்காக இயல்பாகவும், புத்திசாலித்தனமாகவும் பொய் சொல்வார்கள். இவர்களின் பேச்சில் எது உண்மை? எது பொய்? என்று மற்றவர்கள் கண்டுபிடிப்பது கடினம். இவர்களின் பொய் என்பது பெரும்பாலும் தன்னை காப்பாற்றிக் கொள்ளும் வகையிலோ அல்லது மற்றவர்களை சிரிக்க வைக்கும் வகையிலோ இருக்கும். இவர்கள் விஷயங்களை மாற்றிச் சொல்லும் திறமையில் வல்லவர்கள்.

35
துலாம்

துலாம் ராசியின் அதிபதியாக சுக்கிர பகவான் விளங்கி வருகிறார். துலாம் ராசிக்காரர்கள் சமாதானம் மற்றும் சமநிலையை பேணுபவர்களாக இருப்பார்கள். இவர்கள் உறவுகளில் அமைதி கெட்டுவிடக் கூடாது என்பதற்காக பொய் பேச தயங்க மாட்டார்கள். மற்றவர்களின் மனதை புண்படுத்தாமல் இருப்பதற்காக பொய் சொல்வார்கள். தாங்கள் நியாயவாதி அல்லது நடுநிலையாளர்கள் என்பதை நிரூபிக்க உண்மைகளை மாற்றிப் பேசுவார்கள். முடிவுகளை எடுப்பதை தவிர்ப்பதற்காகவோ அல்லது தங்களின் தவறுகளை மறைப்பதற்காகவோ பூசி மெழுகுவார்கள்.

45
சிம்மம்

சிம்ம ராசியின் அதிபதியாக சூரிய பகவான் விளங்கி வருகிறார். சிம்ம ராசிக்காரர்கள் தங்களை சுற்றியே அனைவரது கவனம் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். தங்களின் மீதான மதிப்பு குறைந்து விடக்கூடாது என்பதற்காகவும், தங்கள் பெருமையை உயர்த்தி காட்ட வேண்டும் என்கிற எண்ணத்தால் பொய் சொல்வார்கள். தங்கள் திறமையை பெரிதுபடுத்தி காட்ட அல்லது தங்களை சிறப்பாக முன்னிலைப்படுத்திக்கொள்ள இல்லாத பெருமைகளை குறித்து பேசுவார்கள். குடும்பத்திலோ பணியிடத்திலோ தாங்கள் மிகவும் விசுவாசமானவர்கள் அல்லது சிறந்த உழைப்பாளி என்று காட்டிக் கொள்ள சில சமயம் உண்மையை மறைப்பார்கள். இவர்கள் பெரும்பாலும் தங்கள் கௌரவத்தை காப்பாற்றிக் கொள்வதற்காகவே போய் பேசுவார்கள்.

55
மீனம்

மீன ராசிக்காரர்களின் அதிபதியாக குரு பகவான் விளங்கி வருகிறார். மீன ராசிக்காரர்கள் மிகவும் உணர்வுபூர்வமானவர்கள் மற்றும் கற்பனைத் திறன் கொண்டவர்கள். இவர்கள் நிஜ உலகில் இருந்து தப்பித்து கற்பனை உலகில் வாழ விரும்புவார்கள். தங்கள் எவ்வளவு அன்பானவர்கள், தியாகம் செய்பவர்கள் என்பதை நிரூபிக்க சில கற்பனை கலந்த கதைகளை சொல்வார்கள். யாராவது ஒருவர் கஷ்டப்படுவதை பார்த்தால் அவர்களுக்கு ஆறுதல் அளிப்பதற்காக அல்லது அவர்களை மகிழ்ச்சி படுத்துவதற்காக பொய் சொல்வார்கள். சில நேரங்களில் இவர்களில் பொய்கள் உண்மையில் இருந்து விலகிச் சென்று, ஒரு கற்பனையான கதையை உருவாக்குவதற்காகவே இருக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories