Astrology: நண்பனின் நட்சத்திரத்தில் அமரும் சூரிய பகவான்.! 3 ராசிகளுக்கு நல்ல நாட்கள் ஆரம்பம் ஆகப்போகுது.!

Published : Nov 28, 2025, 01:22 PM IST

Surya Peyarchi 2025: சூரிய பகவான் விரைவில் புதன் பகவானின் சொந்த நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாக இருக்கிறார். இதன் காரணமாக மூன்று ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தையும், புகழையும் பெற உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
15
சூரிய பெயர்ச்சி 2025

வேத ஜோதிடத்தில் சூரிய பகவான் முக்கிய கிரகமாக அறியப்படுகிறார். அவரின் நட்சத்திர மாற்றம் என்பது முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. சூரியன் தனது நிலையை மாற்றும் பொழுது சில ராசியினரின் கௌரவம், தொழில், ஆரோக்கியம், நிதி நிலைமை ஆகியவற்றில் நேரடி பாதிப்பை ஏற்படுத்துகிறது.

25
கேட்டை நட்சத்திரத்திற்கு செல்லும் சூரிய பகவான்

அந்த வகையில் சூரிய பகவான் டிசம்பர் 3 ஆம் தேதி கேட்டை நட்சத்திரத்திலும், டிசம்பர் 16 ஆம் தேதி தனுசு ராசிக்கும் பெயர்ச்சியாக இருக்கிறார். கேட்டை நட்சத்திரத்தின் அதிபதியாக புதன் பகவான் விளங்கி வருகிறார். புதனும் சூரியனும் நட்பு கிரகம் என்பதால் இந்த நட்சத்திரப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை தரும். அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

35
மேஷம்

மேஷ ராசிக்கு இந்த சூரியனின் நட்சத்திரப் பெயர்ச்சி சாதகமான மாற்றங்களை கொண்டு வரும். தொழில் ரீதியாக மேஷ ராசியினர் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். கடினமாக உழைத்து வருபவர்களுக்கு அதற்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். அரசு சார்ந்த உதவிகளுக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு நற்செய்திகள் கிடைக்கும். பொருளாதாரம் மற்றும் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சேமிப்புக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை, அந்தஸ்து அதிகரிக்கும். நற்பெயர் உயரும்.

45
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த காலக்கட்டம் மிகவும் சாதகமாக இருக்கும். வணிக ரீதியான ஒப்பந்தங்கள் கைக்கு வந்து சேரும். நீங்கள் தொடங்கும் எந்த ஒரு முயற்சிகளுக்கும் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் உங்களின் முயற்சிகளுக்கு உதவியாக இருப்பார்கள். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். அதிகம் வருமானம் ஈட்டக்கூடிய வாய்ப்புகள் உருவாகும். இதன் காரணமாக பொருளாதார நிலை உயர்ந்து, பொன் பொருள் வசதிகள் அதிகரிக்கும். புதிய முதலீடுகளுக்கான சிந்தனைகள் உதயமாகும்.

55
மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு பொன்னான நாட்களாக அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். ஏற்கனவே செய்து வரும் தொழிலை விரிவுபடுத்தக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். வீட்டில் சுப செலவுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் வெற்றியடைய வாய்ப்புகள் கிடைக்கும். அரசு சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும். வீடு முதல் பணியிடம் வரை அனைத்து இடங்களிலும் உங்களுக்கான அங்கீகாரமும் ஆதரவும் கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories