Sani Peyarchi 2026: 2026 ஆம் ஆண்டு சனி மற்றும் ராகு பகவானின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும், அதனால் பலன் பெறும் ராசிகள் குறித்தும் இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
ஜோதிடத்தின்படி 9 கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது ராசியை மாற்றிக் கொண்டே இருக்கின்றன. சனி மற்றும் ராகு போன்ற கிரகங்கள் தங்களது ராசிகளை மாற்ற நீண்ட காலம் எடுத்துக் கொள்கின்றன. இந்த நிலையில் 2026 ஆம் ஆண்டு சனி மற்றும் ராகு இருவரும் மாற்றங்களை காண உள்ளனர்.
சனி பகவான் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அஸ்தமன நிலைக்குச் சென்று மீண்டும் உதயமாக இருக்கிறார். அதேபோல் ராகு பகவான் கும்ப ராசியில் இருந்து வெளியேறி மகர ராசிக்குள் நுழைய இருக்கிறார். இந்த இரண்டு கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால் அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ள ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
24
மகரம்
2026 ஆம் ஆண்டு நடக்க உள்ள சனி மற்றும் ராகுவின் மாற்றம் காரணமாக மகர ராசிக்காரர்கள் சிறப்பான நன்மைகளை அனுபவிக்க உள்ளனர். தொழில் செய்து வருபவர்களுக்கு வெற்றியும், புகழும் கிடைக்கும். வேலை மாறுதலுக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். தைரியமும், வீரமும் அதிகரிக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். பொருளாதார நிலை உயர்ந்து மன மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த காலக்கட்டத்தில் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியைப் பெறுவீர்கள்.
34
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் 2026 ஆம் ஆண்டில் நேர்மறையான மாற்றங்களை காண்பீர்கள். சொத்துக்கள், புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து இருப்பவர்களுக்கு சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். தொழிலில் போட்டியாளர்கள் மற்றும் எதிரிகளை வீழ்த்தி ஆதாயம் பெறுவீர்கள். புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கப்படும். திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். புத்திசாலித்தனமான முடிவுகளை எடுத்து வெற்றிகளைக் குவிப்பீர்கள். சொந்தமாக தொழில் செய்து வருபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பரம்பரை சொத்துக்கள் கைக்கு வந்து சேரலாம்.
சனி மற்றும் ராகுவின் மாற்றங்களால் மிதுன ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவை கிடைக்கும். கூட்டாக தொழில் செய்து வருபவர்கள் மிகப்பெரிய லாபத்தைக் காண்பீர்கள். வணிகம் செய்து வருபவர்கள் எதிர்பார்த்து இருந்த ஒப்பந்தங்கள், ஆர்டர்கள் கைக்கு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். தந்தை வழி உடனான உறவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் இருந்த மனக்கசப்புகள் மற்றும் கருத்து வேறுபாடுகள் தீர்க்கப்படும். ஆரோக்கியம் மேம்படும். ஒட்டுமொத்தமாக இந்த காலக்கட்டம் மகிழ்ச்சி நிறைந்ததாக மாறும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)