Thulam Rasi Palan Nov 28: துலாம் ராசி நேயர்களே, இன்று நீங்கள் நினைத்த அனைத்தும் நடக்கும்.! வெற்றி உங்கள் பக்கம் தான்.!

Published : Nov 27, 2025, 04:51 PM IST

Nov 28 Thulam Rasi Palan : நவம்பர் 28, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

PREV
நவம்பர் 28, 2025 துலாம் ராசிக்கான பலன்கள்:

துலாம் ராசி நேயர்களே, இன்றைய நாள் தொழில் ரீதியாக திருப்திகரமான நாளாக இருக்கும். உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும். பிள்ளைகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவைப்படலாம். எதிர்பாராத செலவுகளும், சலசலப்புகளும் வந்து நீங்கும். புத்திசாலித்தனத்தால் அவற்றை சமாளிப்பீர்கள்.

நிதி நிலைமை:

இன்று எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உள்ளது. உங்கள் பேச்சுத் திறமையால் நிதி ஆதாயம் காண்பீர்கள். முதலீடு குறித்த திட்டங்களை தீட்டுவதற்கு ஆலோசிக்கலாம். எனினும் ஆடம்பர செலவுகளை தவிர்க்கவும்.

தனிப்பட்ட வாழ்க்கை:

குடும்ப உறவில் சமூகமான நிலை நீடிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். தொழில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சகோதர உறவு பலப்படும். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் ஆன்மீக சுற்றுலா அல்லது இன்பச் சுற்றுலா செல்ல நேரிடலாம்.

பரிகாரங்கள்:

இன்று மகாவிஷ்ணுவை வழிபடுவது தொழில் மற்றும் நிதி நிலைமையில் ஸ்திரத்தன்மையை அதிகரிக்கும். துர்க்கை அம்மனை வணங்குவது தடைகளை நீக்கி தைரியத்தை அளிக்கும். தேவைப்படுபவர்களுக்கு வெள்ளை துணி அல்லது வெள்ளை பொருட்களை தானம் அளிப்பது சிறந்தது.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories