
ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் தனித்தன்மையான குணங்கள் மற்றும் பலவீனங்கள் உள்ளன. சில ராசிக்காரர்கள் பிறர் கூறும் விஷயங்களை தங்களுக்குள் ரகசியமாக பாதுகாப்பதில் வல்லவர்கள். ஆனால் சில ராசிக்காரர்களால் அதை செய்ய முடியாது. உற்சாகத்தை அடக்க முடியாமல் ரகசியங்களை உடனடியாக பிறரிடம் பகிர்ந்து விடுவார்கள். இந்த கட்டுரையில் ரகசியங்களை பாதுகாப்பாக வைத்திருக்க முடியாத ஐந்து ராசிக்காரர்கள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
மிதுன ராசிக்காரர்கள் இயல்பிலேயே பேச்சுத்திறமை மிக்கவர்கள். அவர்களுக்கு உரையாடல் என்பது மூச்சுக்காற்று போன்றது. குழந்தைகள் மிட்டாய்களை விரும்புவது போல மிதுன ராசிக்காரர்கள் பிறரின் ரகசியங்களை அறிந்து கொள்ள விரும்புகிறார்கள். ஒரு ரகசியம் தெரிந்து விட்டால் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாமல் அவர்களால் இருக்க முடியாது. மிதுனத்தின் ஆளுமை கிரகம் புதன் என்பதால் அவர்களுக்கு தகவல் மற்றும் தொடர்பு பரிமாற்றத்தில் ஆர்வம் ஏற்படுகிறது. அவர்கள் வேண்டுமென்றே ரகசியத்தை பிறரிடம் கூறுவதில்லை. அவர்களின் உற்சாகத்தால் அந்த ரகசியம் எப்படியாவது வெளிப்பட்டுவிடும். மற்றவர்களின் ரகசியங்களை அவர்கள் பாதுகாப்பாக வைக்க விரும்பினாலும் அவர்களின் பேச்சு வேகத்தில் ரகசியங்கள் தவறுதலாக வெளியாகிவிடும்.
தனுசு ராசிக்காரர்கள் உண்மையை உரக்கச் சொல்லும் இயல்பு கொண்டவர்கள். அவர்கள் வியாழன் (குரு) கிரகத்தால் ஆளப்படுபவர்கள். அவர்கள் நேர்மையையும், உண்மையும் விரும்புவார்கள். இவர்களால் ஒரு விஷயத்தை ரகசியமாக பாதுகாத்து வைத்திருக்க முடியாது. ஏனெனில் அவர்கள் மற்றவர்களை மகிழ்ச்சியடைய செய்ய விரும்புகிறார்கள். அதே சமயம் தாங்கள் பேசும் கருத்து உண்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஏதேனும் ஒரு பரிசு அல்லது பயணத்திட்டம் பற்றிய ரகசியத்தை அவர்கள் அறிந்தால் உற்சாகத்தின் காரணமாக அந்த ரகசியம் வெளியாகிவிடும். அவர்களின் இந்த இயல்பு அவர்களை அன்புக்குரியவர்களாக மாற்றினாலும், ரகசியத்தை பாதுகாக்க முடியாத காரணத்தால் அவர்கள் பலவீனமாக வெளிப்படுகின்றனர்.
மேஷ ராசிக்காரர்கள் உற்சாகமும், ஆர்வமும் நிறைந்தவர்கள். அவர்களின் ஆளுமை கிரகம் செவ்வாய் என்பதால் அவர்களுக்கு தீவிர ஆற்றலும், உடனடியாக செயல்பட வேண்டும் என்கிற எண்ணமும் இயல்பிலேயே இருக்கும். அவர்களுக்கு பொறுமை என்பது சற்று குறைவு. எனவே ரகசியத்தை பாதுகாப்பாக வைப்பது என்பது அவர்களுக்கு சவாலான காரியமாக இருக்கும். மேஷ ராசிக்காரர்கள் தங்கள் நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் கூறிய ரகசியங்களை பாதுகாக்க வைக்க எவ்வளவு முயற்சித்தாலும் அவர்களின் அதீத உற்சாகம் காரணமாக ரகசியத்தை வெளியில் உளறி விடுவார்கள்.
கும்ப ராசிக்காரர்கள் புதுமையான யோசனைகளையும், தனித்துவமான அணுகுமுறைகளையும் விரும்புபவர்கள். எந்த திட்டமானாலும் அதை மற்றவர்களுடன் பகிர்ந்து அவர்களின் கருத்துக்களை அறிந்து அதன் பின்னரே செயல்படுத்த விரும்புவார்கள். இதன் காரணமாக அவர்களிடம் எந்த ஒளிவு மறைவும் இருக்காது. அனைத்து விஷயங்களையும் பிறருடன் பகிர்ந்து கொள்ளும் இந்த குணத்தால் தற்செயலாக ரகசியத்தையும் வெளிப்படுத்தி விடுகிறார்கள். அவர்கள் வேண்டுமென்றே இது போன்று செய்வதில்லை. அவர்களின் இயல்பான குணமே இதுதான். அவர்களுக்குள் எந்த ரகசியமும் இருக்காது. பிறர் கூறும் ரகசியத்தையும் அவர்களால் பாதுகாக்க முடியாது.
துலாம் ராசிக்காரர்கள் சுக்கிரன் கிரகத்தால் ஆளப்படுபவர்கள். அவர்கள் மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள விரும்புகின்றனர். துலாம் ராசிக்காரர்களும் எந்த ஒரு விஷயமானாலும் அதை மற்றவர்களிடம் ஆலோசிக்க விரும்புவார்கள். இதனால் அவர்கள் தற்செயலாக ரகசியத்தை வெளியில் சொல்லி விடுகின்றனர். இந்த இயல்பு அவர்களை அன்பானவர்களாக மாற்றினாலும், ரகசியத்தை பாதுகாப்பதில் அவர்களை சற்று பலவீனமாக்குகிறது.
(பொறுப்பு துறப்பு: மேற்கூறிய ராசிக்காரர்கள் ஒரு ரகசியத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதில் சவால்களை மேற்கொண்டாலும், அவர்களின் உற்சாகமும் மற்றவர்களை மகிழ்ச்சி அடையச் செய்யும் ஆர்வமும் அவர்களை சிறப்பானவர்களாக மாற்றுகிறது. இவர்கள் வேண்டுமென்றே ரகசியங்களை மற்றவர்களிடம் கூறுவதில்லை. அவர்களை ஆளும் கிரகங்கள் மற்றும் அவர்களின் இயல்பான குணமே ரகசியங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ள தூண்டுகிறது. இந்த கட்டுரை முழுக்க முழுக்க இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் ஜோதிட தகவல்களின் அடிப்படையிலானது மட்டுமே. இதன் நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)