
ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்கள் வலுவான ஆளுமைக்கும், சுதந்திரமான தன்மைக்கும் பெயர் பெற்றவர்கள். அவர்கள் சுதந்திரத்தையும், தனித்துவத்தையும் எப்போதும் பாதுகாக்க விரும்புகின்றனர். இவர்கள் மற்றவர்களின் கட்டுப்பாட்டுக்கு உட்படுவதை வெறுக்கின்றனர். தங்கள் முடிவுகளை தாங்களே எடுக்க விரும்புகின்றனர். எந்த சூழ்நிலையானாலும் தங்கள் சுதந்திரத்தை மற்றவர்களிடம் பறிகொடுக்க அவர்கள் விரும்புவதில்லை. இந்த கட்டுரையில் மற்றவர்களின் ஆதிக்கத்தை ஒருபோதும் ஏற்காத நான்கு ராசிக்காரர்கள் குறித்து பார்க்கலாம்.
கும்ப ராசிக்காரர்கள் தனித்துவமாக சிந்திப்பவர்கள் மற்றும் புதுமையான யோசனைகளை முன்மொழிபவர்கள். இவர்கள் பாரம்பரிய விதிமுறைகளை உடைத்து தங்களுக்கான சொந்த பாதையை உருவாக்க விரும்புபவர்கள். மற்றவர்களின் கட்டுப்பாட்டை இவர்கள் ஏற்க தயாராக இருப்பதில்லை. தங்கள் முடிவுகளை தாங்களே எடுக்க விரும்புவர். தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் பிறரை வைத்துக்கொள்ள நினைப்பார்கள். இவர்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்றுவதற்கு சுதந்திரத்தை மிகவும் மதிக்கின்றனர். மன உறுதியும், புதிய யோசனைகளை ஆராயும் ஆர்வமும் மற்றவர்கள் இவர்கள் மீது செலுத்தும் ஆதிக்கத்தை எதிர்க்க உதவுகிறது.
தனுசு ராசிக்காரர்கள் சுதந்திரத்தையும், சாகசத்தையும் விரும்புவார்கள். இவர்கள் தாங்கள் வகுத்துக் கொண்ட விதிகளின்படி வாழ விரும்புபவர்கள். மற்றவர்களின் கட்டுப்பாட்டையும், சமூகம் விதிக்கும் கட்டுப்பாடுகளையும் ஏற்க மறுப்பவர்கள். இவர்கள் புதிய அனுபவங்களை தேடுவதற்கும் தங்கள் எல்லைகளை விரிவாக்குவதற்கும் ஆர்வமாக இருப்பார்கள். இவர்களை ஒரு குறிப்பிட்ட வழியில் செயல்பட வற்புறுத்துவது கடினம். தங்கள் இலக்குகளை அடைய தனித்துவமான பாதையைத் தேர்ந்தெடுப்பார்கள். மற்றவர்களின் ஆதிக்கத்தை இவர்கள் எதிர்ப்பதற்கு இவர்களின் தன்னம்பிக்கையும், சுதந்திர உணர்வும் முக்கிய காரணங்களாக அமைகின்றன.
விருச்சிக ராசிக்காரர்கள் உணர்ச்சி ஆழத்திற்கும், உறுதியான மனநிலைக்கும் பெயர் பெற்றவர்கள். இவர்கள் உள்மனதை யாராலும் அறிய முடியாது. மற்றவர்கள் தங்கள் வாழ்க்கையில் தலையிடுவதை இவர்கள் அனுமதிப்பதில்லை. தங்கள் முடிவுகளை தாங்களே எடுக்க விரும்புவார்கள். மற்றவர்களின் கட்டளைகளுக்கும் அடிபணிய மறுப்பர். இவர்களின் இந்த தீவிரமான குணாதிசயங்கள் இலக்குகளை அடைவதற்கும், தடைகளைத் தாண்டி செல்வதற்கும் உதவுகிறது. மேலும் இவர்களை கட்டுப்படுத்த முயல்பவர்களுக்கு எதிராக உறுதியாக நிற்கின்றனர். இவர்களை அன்பாலும் கட்டுப்படுத்த முடியாது. மிரட்டியும் பணிய வைக்க முடியாது .அப்படி செய்ய நினைத்தால் நீங்கள் தான் ஏமாந்து போவீர்கள்.
மேஷ ராசிக்காரர்கள் தைரியமானவர்கள் மற்றும் தன்னம்பிக்கை நிறைந்தவர்கள். இவர்கள் தங்கள் வாழ்க்கையை தாங்களே வழிநடத்திச் செல்ல விரும்புவார்கள். மற்றவர்கள் இவர்கள் மீது கட்டுப்பாடு விதிக்க முயலும் போது அவர்கள் உடனடியாக எதிர்ப்பு தெரிவிப்பார்கள். மற்றவர்களின் சொல் பேச்சை கேட்டுக் கொள்வது போல தோன்றினாலும், இறுதி முடிவுகளை இவர்களை எடுப்பார்கள். தங்கள் இலக்குகளை அடைய தன்னிச்சையாக செயல்படுவதை விரும்புவார்கள். யாராவது இவர்களை வழிநடத்த முயன்றால் அவர்களை விட்டு விலகிச் செல்வார்கள். இவர்களின் முன்னோக்கி செல்லும் ஆற்றல் எந்த ஒரு கட்டுப்பாட்டையும் முறியடித்து தங்கள் பாதையை தாங்களே தேர்ந்தெடுக்க வைக்கிறது.
மேற்குறிப்பிடப்பட்ட ராசிக்காரர்கள் தங்கள் சுதந்திரத்தையும் தனித்துவத்தையும் பாதுகாக்க விரும்புவார்கள். மற்றவர்கள் தங்கள் வாழ்க்கையில் தலையிடுவதையோ அல்லது தங்களை கட்டுப்படுத்துவதையோ இவர்கள் விரும்புவதில்லை. தங்கள் விருப்பப்படி வாழ்க்கையை வாழ விரும்புகின்றனர். தங்கள் இலக்குகளை அடையும் வழியில் எந்த தடைகள் வந்தாலும், அதை உடைத்தெறிந்து முன்னேறிச் செல்வார்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள், பொதுவான ஜோதிட கருத்துக்கள் அடிப்படையில் எழுதப்பட்டவை. இந்த தகவல்களை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களின் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் பொறுப்பேற்காது. ஒவ்வொருவரின் ஜாதகமும் மாறுபடும் என்பதால் துல்லியமான பலன்களை அறிந்து கொள்ள அனுபவமிக்க ஜோதிடரை அணுகுவது நல்லது)