திருவோண நட்சத்திரத்தில் அமரும் யமன்.! 4 ராசிகளின் வாழ்க்கை அடியோடு மாறப்போகுது.! உங்க ராசி இருக்கா?

Published : Feb 10, 2026, 10:28 AM IST

Yama gochar 2026 in Thiruvona Nakshatra: சில தினங்களில் யமன் திருவோண நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாக இருக்கிறார் இது சில ராசிகளுக்கு சிறப்பான பலன்களை தரும் அது குறித்து இங்கு காணலாம். 

PREV
15
யமன் நட்சத்திரப் பெயர்ச்சி

வேத ஜோதிடத்தில் புளூட்டோ கிரகம் யமன் என்று அழைக்கப்படுகிறது. மற்ற கிரகங்களைப் போலவே எமனும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது ராசி மற்றும் நட்சத்திரத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறார். அந்த வகையில் யமன் மார்ச் 3, 2026 மதியம் 2:06 மணிக்கு திருவோண நட்சத்திரத்தில் நுழைகிறார். இந்த பெயர்ச்சி 4 ராசிக்காரர்களுக்கு சிறப்புப் பலன்களைத் தரும். அந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை, என்னென்ன நன்மைகள் கிடைக்கும் எனப் பார்ப்போம்.

25
கடகம்

கடக ராசிக்கு, யமனின் இந்த நட்சத்திர பெயர்ச்சி நல்ல நாட்களைக் கொண்டு வரும். நிதி ஆதாயத்திற்கான வழிகள் திறக்கும். வருமானத்திற்கான புதிய கதவுகள் திறக்கப்படும் பணப் பற்றாக்குறைவுடன் வாழ்க்கை நடத்தி வந்தவர்கள் இனி நிறைவான வாழ்க்கையை அனுபவிப்பார்கள். வாழ்க்கைத் துணையுடன் உறவு மேம்படும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றியைப் பெறுவீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். செலவுகள் குறையும்.

35
கன்னி

கன்னி ராசிக்கு யமனின் நட்சத்திர பெயர்ச்சி சுப பலன்களைத் தரும். பிள்ளைகளின் மூலம் நல்ல செய்திகள் வரலாம். பிள்ளைகளின் உயர்கல்வி, வேலைவாய்ப்பு அல்லது திருமணம் தொடர்பான சுப செய்திகள் கிடைக்க கூடும். நேர்காணல் முடித்து காத்திருப்பவர்களுக்கு வேலைக்கான அழைப்புகள் கிடைக்கலாம். படைப்பாற்றல் மற்றும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். தலைமைப் பண்புகள் உயரும்.

45
விருச்சிகம்

விருச்சிக ராசிக்கு யமனின் நட்சத்திர பெயர்ச்சி சுபமாக அமையும். எதிர்பாராத வெற்றி கிடைக்கும். பழைய முதலீடுகள் நல்ல லாபம் தரும். வாழ்க்கையில் நேர்மறை மாற்றங்கள் ஏற்படும். வீட்டில் மகிழ்ச்சி பெருகும். பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த பதவி உயர்வு அல்லது புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் முதலீடு செய்தவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். சமூகத்தில் உங்களின் கௌரவம் மற்றும் செல்வாக்கு உயரும்.

55
தனுசு

தனுசு ராசிக்கு யமனின் நட்சத்திர பெயர்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். திடீர் பண வரவு காரணமாக நிதி சிக்கல்கள் தீரும். சேமிப்புக்கான வழிகள் திறக்கும். கடின உழைப்புக்கு முழு பலன் கிடைக்கும். வேலையில் இருந்த பிரச்சனைகள் தீரும். குடும்ப ஒற்றுமை மேம்படும். தந்தை வழியில் சொத்துக்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பூர்வீக சொத்துக்களில் இருந்த வில்லங்கங்கள் நீங்கி உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கும் ஏற்ற நேரமாகும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories