மார்ச் மாத ராசிபலன் 2026: மேஷ ராசிக்கு பண மழையா? இடமாற்றமா? முழுமையான பலன்கள் இதோ!

Published : Feb 09, 2026, 08:12 PM IST

Mesha Rasi March 2026 Predictions Tamil : மேஷ ராசிக்கான 2026 ஆம் ஆண்டின் 3ஆவது மாதமான மார்ச் மாதம் எப்படி இருக்கிறது என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
15
Mesha Rasi March 2026 Predictions Tamil

மேஷ ராசிக்கான மார்ச் மாதம் 2026 ராசி பலன்களை பார்க்கையில் இந்த மாதம் ஏற்ற இறக்கம் நிறைந்த ஒரு மாதமாக இருக்கும். மேலும், சவால்கள் நிறைந்த மாதமாகவும் இந்த மார்ச் மாதம் இருக்கும். மேஷ ராசியினரைப் பொறுத்த வரையில் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கையில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் செவ்வாய், சூரியம், புதன், சுக்கிரன், சூரியன், ராகு ஆகிய 5 கிரகங்களும் உங்களது ராசிக்கு லாப ஸ்தானமான 11ஆவது வீட்டில் சஞ்சரிக்கின்றனர். சனி பகவான் 12ஆவது வீட்டிலும், குரு பகவான் 3ஆவது வீட்டிலும், கேது பகவான் 5ஆவது வீட்டிலும் சஞ்சரிப்பது வாழ்க்கையில் பல விதமான மாற்றங்களை ஏற்படுத்தும். அந்த மாற்றங்கள் என்னென்ன என்பது பற்றி விரிவாக பார்க்கலாம்.

25
பொருளாதார நிலை – வரவு, செலவு கலந்த மாதம்

மேஷ ராசியினருக்கு இந்த மார்ச் மாதம் பொருளாதார நிலையை பார்க்கையில், பண வரவு அதிகமாக இருக்கும். செலவும் அந்தளவிற்கு இருக்காது. இதனால், உங்களது சேமிப்பு உயரும். ஆனால், மாதத்தின் பின்பகுதியில் இந்த நிலையானது தலைகீழாக மாறிவிடும். வரவைக் காட்டிலும் செலவுகள் கட்டுக்கடாங்காமல் போகலாம். இதன் காரணமாக இந்த மாத வரவு செலவு கணக்கை முழுமையாக தீர்மானிக்க, வரவு வரும் போது சேமித்து வைத்துக் கொள்வது நன்மை தரும்.

35
தொழில் வாழ்க்கை:

அலுவலகத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். ஏற்கனவே வேலை பார்க்கும் நேரத்தை விட கூடுதலான நேரம் ஒதுக்கி வேலை பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும். இதன் காரணமாக போதுமான ஓய்வு இல்லாமல் மன அழுத்தம் ஏற்படலாம். சொந்தமாக தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். வெளிநாட்டு தொடர்புகள் மூலமாக லாபம் அதிகரிக்கும். புதிய முதலீடு செய்யும் எண்ணம் மேலோங்கும்.

45
காதல், திருமணம் மற்றும் குடும்பம்

மேஷ ராசியினருக்கு காதல் வாழ்க்கையைப் பொறுத்த வரையில் இந்த மாதம் தொடக்கத்தில் இனிமையானதாக இருக்கும். ஆனால், பின்பகுதியில் காதல் ஜோடிகளுக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படக் கூடும். ஆதலால், இருவரும் கொஞ்சம் பொறுமையாக இருப்பது நல்லது. மேலும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நன்மை அளிக்கும்.

கணவன் மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வரும் மார்ச் மாதம் 2 ஆம் தேதி சுக்கிரன் 12ஆம் வீடான மீன ராசிக்கு பெயர்ச்சியாகிறது. இந்த பெயர்ச்சியானது மேஷ ராசிக்கு சில கசப்பான சங்கடங்களை ஏற்படுத்தும். எனினும், மாத கடைசியில் மீண்டும் கணவன் மனைவிக்கிடையில் ஒற்றுமை மேலோங்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். மேலும், குடும்ப உறவினர்களின் வருகையும், அவர்களது ஆதரவும் உங்களுக்கு பக்கபலமாக இருக்கும்.

55
கல்வி மற்றும் வெளிநாட்டு படிப்பு:

மேஷ ராசியினரைப் பொறுத்த வரையில் மாணவர்களுக்கு படிப்பில் சற்று ஆர்வம் குறையும். படிக்கும் போது படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தி படிக்க வேண்டும். மேல் படிப்பிற்காக வெளிநாடு, வெளியூர் செல்ல விரும்புபவர்களுக்கு சாதகமான மாதமாக இந்த மாதம் இருக்கும்.

ஆரோக்கியம்

மேஷ ராசியினரை பொறுத்த வரையில் மார்ச் மாதத்தின் 2ஆம் பாதியில் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வெளியிடங்களிலும், நேரம் கடந்து சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். ஒரு சிலருக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகளும், செரிமான கோளாறும் ஏற்படவாய்ப்புள்ளது. ஏற்கனவே சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது உணவு கட்டுப்பாட்டில் கவனம் செலுத்த வேண்டும்.

பரிகாரம்:

மேஷ ராசியினர் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் அருகிலுள்ள முருகன் கோயிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபாடு செய்ய எல்லா நன்மையும் உண்டாகும். மேலும், பூங்காவில் 9 மாதுளை செடிகளை நட கிரக தோஷத்தால் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories