நிறைய பேர் சாப்பிடும்போது போன் பார்ப்பது, டிவி பார்ப்பது, அல்லது போனில் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். இதனால், சாப்பாட்டின் மீது கவனம் இருக்காது. இப்படி கவனச்சிதறலுடன் சாப்பிடுவதும் உணவை அவமதிப்பதற்கு சமம். இது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதோடு, வீட்டில் அமைதியின்மையையும் அதிகரிக்கும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
சாப்பிடும்போது அமைதியாக, நன்றியுணர்வுடன் உணவை மகிழ்ச்சியாக ஏற்க வேண்டும். மேலும், அழுக்கான, கழுவாத பாத்திரங்களில் சாப்பிடுவதும் வாஸ்து தோஷங்களை அதிகரித்து, வீட்டில் எதிர்மறை ஆற்றலை பெருக்கும். சாப்பிடுவதற்கு முன்பு கைகளை நன்றாகக் கழுவ வேண்டும்.