
பணம் சம்பாதிக்க வேண்டும் என்று தான் ஒவ்வொருவரும் கடினமாக உள்ளோம். எவ்வளவு கஷ்டப்பட்டு பணத்தை சம்பாதித்தாலும் பணத்தை சேமிப்பது, புத்திசாலித்தனமாக செலவுடுவது என்று எல்லாராலும் முடியாது. ஒரு சிலருக்கு மட்டுமே அது சாத்தியம். அந்த வகையில் ஜோதிடத்தின் படி சில ராசிக்காரர்கள் பணத்தை எவ்வளவுதான் சம்பாதித்தாலும் அவர்களுக்கு சேமிப்பது எப்படி என்று தெரியாது. பணத்தை தண்ணீர் போல செலவு செய்வார்கள். அவர்களிடம் பணம் ஒருபோதும் தாங்காது. அத்தகைய ரசிகர்களில் பட்டியல் இங்கே.
ஜோதிடத்தின் படி, இந்த ராசிக்காரர்கள் பணத்தை வீணாக செலவு செய்வார்கள். ஒரு பொருளைப் பார்த்தால் அது அவர்களுக்கு தேவைப்படுமா? இல்லையா? என்பதை கூட யோசிக்காமல், உடனே அதை வாங்கி விடுவார்கள். அவர்கள் விரும்பும் ஒவ்வொரு பொருட்களையும் வாங்குவார்கள். இதன் காரணமாக இவர்களிடம் பணம் தாங்காது.
இந்த பழக்கத்தை கட்டுப்படுத்துவது எப்படி?
நீங்கள் ஏதாவது ஒரு பொருளை வாங்க விரும்பினால் அது உண்மையிலேயே உங்களுக்கு தேவையா? என்று ஒன்றுக்கு பலமுறை யோசிக்க வேண்டும். உண்மையாகவே தேவைப்பட்டால் வாங்குங்கள். மேலும் தேவையற்ற பொருட்களை ஒரு பேப்பரில் எழுதி அதன்படி வாங்குங்கள். இதனால் உங்களது பணம் வீணாக செலவாகாது.
ஜோதிடத்தின் படி, மிதுன ரசிகர்கள் பணத்தை அதிகமாக செலவழிப்பார்கள். இவர்கள் தொழில்நுட்ப சாதனங்கள் அல்லது ஃபேஷன் பொருட்கள் புதுசாக வந்தால் அவற்றை உடனே வாங்கி விடுவார்கள். அது அவர்களுக்கு உபயோகப்படுமா? இல்லையா? என்பதை கூட அவர்கள் யோசிப்பதில்லை. அந்த பொருட்களை வாங்கி பிறகு தான் அவர்கள் அது குறித்து யோசிப்பார்கள்.
இதை எப்படி கட்டுப்படுத்துவது?
நீங்கள் ஏதாவது ஒரு பொருள் வாங்க போகிறீர்கள் என்றால் அது உண்மையிலேயே உங்களுக்கு அவசியமா? என்று உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். உங்களிடம் இருக்கும் பொருட்களை மீண்டும் வாங்க வேண்டாம். பழைய பொருட்களை விற்றுவிட்டு பிறகு புதிய பொருட்களை வாங்குங்கள். இதனால் பணம் மிச்சமாகும்.
ஜோதிடத்தின் படி சிம்ம ராசிக்காரர்கள் ஆடம்பர பொருட்களுக்கு அதிகமாக பணம் செலவழிப்பார்கள். இவர்கள் சொகுசு கார், விலையுயர்ந்த நகைகள் போன்றவற்றை வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டுபவர்கள். இந்த பழக்கம் அவர்களது சேமிப்பை பெரிதும் பாதிக்கும். அவர்கள் எவ்வளவு சம்பாதித்தாலும் ஏதோ ஒரு வடிவில் செலவழித்து விடுவார்கள்.
இதை கட்டுப்படுத்துவது எப்படி?
தரமான ஆனால் மலிவான பொருட்களை வாங்குங்கள். மாதத்திற்கு 50 சதவீதம் ஆடம்பரமான செலவுகளை குறைக்க முயற்சி செய்யுங்கள்.
ஜோதிடத்தின்படி, துலாம் ராசிக்காரர்கள் மன அழுத்தம் அல்லது பதட்டமாக இருக்கும் சமயத்தில் அதிகமாக ஷாப்பிங் செய்வார்கள். புதிய பொருட்கள் வாங்கினால் மன அமைதி கிடைக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். பணத்தை செலவழித்த பிறகு அது குறித்து வருத்தப்படுவார்கள்.
இந்த பழக்கத்தை கட்டுப்படுத்துவது எப்படி?
உங்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கும் போது உடற்பயிற்சி அல்லது தியானம் செய்யுங்கள். மன அழுத்தத்தில் இருக்கும் போது ஏதாவது பொருள் வாங்கினால் அது உண்மையிலேயே உங்களுக்கு தேவையா? என்று யோசியுங்கள்.
ஜோதிடத்தின்படி இந்த ராசிக்காரர்கள் தங்களை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பணத்தை வீணாக செலவு செய்வார்கள். தேவையில்லாத பொருட்களை வாங்கும் பழக்கம் இவர்களுக்கு அதிகமாகவே உண்டு. சிறிய செலவுதானே என்று நினைத்து பல தேவையில்லாத பொருட்களுக்கு பணத்தை அதிகமாக செலவழிப்பார்கள்.
இந்த பழக்கத்தை எப்படி கட்டுப்படுத்துவது?
நீங்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பதற்கான ஒரு வரம்பை நிர்ணயிக்கவும். கிரெடிட் கார்ட் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுங்கள்.
ஜோதிடத்தின்படி இந்த ராசிக்காரர்கள் பார்க்கும் அழகான பொருட்களை உடனே வாங்கி விடுவார்கள். அது அவர்களுக்கு உபயோகப்படுமா? இல்லையா? என்பது குறித்து ஒருபோதும் யோசிக்க மாட்டார்கள். இதனால் அவர்கள் தேவையற்ற பொருட்களுக்கு வீணாக பணத்தை செலவழிப்பார்கள்.
இந்த பழக்கத்தை கட்டுப்படுத்துவது எப்படி?
எந்த ஒரு புதிய பொருட்களை வாங்குவதற்கும் முன்பு உண்மையிலேயே அது உங்களுக்கு பயனுள்ளதா? என்று ஒன்றுக்கு பலமுறை யோசிக்கவும். முக்கியமாக மாதாந்திர செலவு பட்ஜெட்டை பின்பற்றுங்கள்.