வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்துவமான ஆளுமை இருக்கும். சிலர் தங்களுடைய நடத்தை மற்றும் வார்த்தைகளால் பிறரின் மனங்களை வெல்வார்கள். சிலருக்கோ எவ்வளவு நல்ல செயல்கள் செய்தாலும், கடினமாக முயற்சித்தாலும் பிறரை கவர முடியாது. அவர்கள் எவ்வளவு உயரத்திற்குச் சென்றாலும், எவ்வளவு நேர்மையானவராக இருந்தாலும், எவ்வளவு உயரத்தை அடைந்தாலும் பிறரால் வெறுக்கப்படுகிறார்கள். அவர்களின் முன்னால் புகழ்ந்து பேசப்பட்டாலும், பின்னால் சென்று சபிக்கப்படுகிறார்கள். எண் கணிதத்தின் படி அத்தகையவர்களை எளிதாக அடையாளம் காணலாம். குறிப்பாக நாம் பிறந்த தேதிகளின் அடிப்படையில் அவர்களை அறிந்து கொள்ளலாம். அது குறித்து இந்த பதிவில் காணலாம்.