ஜோதிடத்தின் படி, ஜனவரி மாசம் பிறந்த ஆண்கள் இயற்கையாகவே தலைமைத்துவம் உள்ளவர்கள், திட்டமிடுவதில் வல்லவர்கள், செய்யும் தொழிலில் வெற்றியைக் காண்பார்கள். இந்த மாதத்தில் பிறந்த ஆண்களின் சாதனையானது திருமணத்திற்கு பிறகு இரட்டிப்பாகும். இவர்கள் வெற்றி மேல் வெற்றியை காண்பார்கள். செல்வத்தைக் குவிப்பார்கள். நல்ல நிதி முடிவுகளை எடுப்பார்கள். இவர்களது துணை இவர்களுக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவை தருவதால் இவர்கள் எந்த ரிஸ்க் எடுத்தாலும் அதில் சுலபமாக வெற்றியை காண்பார்கள்.