Vishkumbh Yogam 2026: மிகவும் ஆபத்தான விஷகும்ப யோகம்.! கண்டத்தில் சிக்கப்போகும் 3 ராசிகள்.! கடும் எச்சரிக்கை.!

Published : May 30, 2026, 07:00 AM IST

Rasi Palan : ஜூன் மாதம் உருவாக இருக்கும் விஷகும்ப யோகத்தால் சில ராசிக்காரர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
15
Vishkumbh Yogam 2026

வேத ஜோதிடத்தின்படி கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் குறிப்பிட்ட அமைப்பானது விஷகும்ப யோகத்தை உருவாக்க இருக்கிறது. திருக்கணித பஞ்சாங்கத்தின்படி இந்த யோகமானது ஜூன் 7 ஆம் தேதி காலை 10:02 மணிக்கு தொடங்கி, ஜூன் 8 அன்று காலை 9:28 வரை நீடிக்கும். விஷகும்ப யோகம் அசுபமானதாகவும், பாதகமானதாகவும் கருதப்படுகிறது. இந்த யோகத்தின் தாக்கம் அடுத்த சில தினங்களுக்கு நீடிக்க இருப்பதால் சில ராசிக்காரர்கள் உடல்நிலை பாதிப்பு, நிதியிழப்பு, குடும்ப வாழ்க்கை தொடர்பான மன அழுத்தங்கள் ஆகியவற்றை சந்திக்க நேரிடலாம். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்: Date of Birth Astrology: உங்கள் ராசிப்படி எந்த வயதில் நீங்கள் கோடீஸ்வரர் ஆவீங்கன்னு தெரியுமா? மேஷம் முதல் மீனம் வரை.!

25
ரிஷபம்

ரிஷப ராசியில் பிறந்தவர்கள் ஜூன் ஏழாம் தேதி தொடங்கி அடுத்த சில வாரங்களுக்கு மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். இந்த காலகட்டம் புதிய சவால்களை கொண்டு வரலாம். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் தோல்வியில் முடியலாம். கடும் நிதி இழப்புகளுக்கு ஆளாகக்கூடும். பணியில் இருப்பவர்கள் வேலையை விட்டு விலகும் சூழல் ஏற்படலாம். அலுவலகத்தில் உங்களுக்கு எதிராக சிலர் சதி செய்யக்கூடும். மேலதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகளும் எழலாம். பணிச்சூழலில் பதற்றமான சூழ்நிலையை உணரலாம். குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களின் உடல் நலம் குறித்த கவலைகளும் அதிகரிக்கும். எனவே அவர்களுக்கு கூடுதல் கவனம் தேவைப்படும்.

இதையும் படியுங்கள்: Numerology: உங்கள் பிறந்த தேதியைச் சொல்லுங்க.! நீங்கள் மகாபாரதத்தின் எந்தக் கதாபாத்திரம் என்று நாங்க சொல்றோம்!

35
கன்னி

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு விஷகும்ப யோகத்தின் காரணமாக தொழில் சார்ந்த விஷயங்களில் மன அழுத்தம் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் உடல்நலக் குறைவும் ஏற்படக்கூடும். உங்கள் பழைய நோய் மீண்டும் உங்களை வாட்டலாம். நோய் குணமடைவதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்ளலாம். இது உங்கள் மனக் கவலையை மேலும் அதிகரிக்கக்கூடும். வேலையில் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். சிறிய கவனசிதறல் கூட பெரிய பிரச்சினைகளாக மாறும். நண்பர்களுடன் வாக்குவாதங்கள் எழலாம். இது மோதல்களையும், நீண்ட நாள் பிரிவுகளையும் உருவாக்கும். இரவு நேர பயணங்கள் அல்லது நீண்ட தூர பயணங்களை சில காலத்திற்கு ஒத்தி வைப்பது நல்லது.

இதையும் படியுங்கள்: Rasi Palan: கடக ராசியில் குரு, சுக்கிரன், புதன் கூட்டணி: 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட், பணமழை கொட்டப்போகுது.!

45
மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு விஷகும்ப யோகம் நிதி சார்ந்த பிரச்சினைகளை கொண்டு வரலாம். நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த ஒரு திட்டம் தோல்வியில் முடியலாம். வெற்றிக்கனியை எட்ட முடியாமல் போவதால் ஏமாற்றம் அடைவீர்கள். நிதி இழப்புகள் காரணமாக கடன் வாங்கும் சூழல் உருவாகும். நிதியில் நிலையற்ற தன்மை நீடிக்கும். அதோடு தேவையில்லாத செலவுகளும் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உங்கள் உடல் நலத்திற்கு முன்னுரிமை அளிப்பது அவசியமாகும். உடல்நலம் பழையது போல் வருவதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்ளலாம். சொத்து பிரச்சனைகள் உங்களுக்கு எதிராக முடியலாம்.

இதையும் படியுங்கள்: Rahu Transit: ராகுவின் கொடூர பார்வை இந்த 4 ராசிகள் மேல் விழப்போகிறது.! கஷ்ட காலம் ஆரம்பம்.! மன அழுத்தம், பண நஷ்டம் வரலாம்.!

55
பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

Read more Photos on
click me!

Recommended Stories