
இந்து மதத்தில் முழுமுதற் கடவுளாக வணங்கப்படும் விநாயகர் பெருமான் அவதரித்த திருநாளே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதியில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. பண்டிகை நாட்களில் கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றம் சில ராஜ யோகங்களை உருவாக்கி மனிதர்களின் வாழ்க்கையில் மாற்றங்களை தரும். அந்த வகையில் இந்த ஆண்டில் விநாயகர் சதுர்த்தி நாளில் பல ராஜயோகங்கள் உருவாக உள்ளன.
அந்த வகையில் அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரனும், கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதனும், கடக ராசியில் ஒன்றிணைந்து லட்சுமி நாராயண யோகத்தை உருவாக்க உள்ளனர். இந்த ராஜயோகம் மிகவும் மங்களகரமான ராஜயோகமாகும். இந்த ராஜயோகத்தின் தாக்கம் 12 ராசிகளிலும் காணப்பட்டாலும், குறிப்பிட்ட மூன்று ராசிகளுக்கு நல்ல பலன்களை தரவுள்ளது. இந்த மூன்று ராசிக்காரர்கள் நிதி ரீதியாக நல்ல நன்மைகளை பெற உள்ளனர். வணிகம் மற்றும் தொழிலில் அவர்களுக்கு வெற்றி கிடைக்க உள்ளது. அவர்களின் லாபம் இரட்டிப்பாக உள்ளது. உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். லட்சுமி நாராயண ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார் என்பதை இந்த பதிவில் காணலாம்.
துலாம் ராசிக்காரர்களுக்கு லட்சுமி நாராயண யோகம் சிறப்பான பலன்களை தரவுள்ளது. விநாயகரின் ஆசியாலும், லட்சுமி நாராயண யோகத்தாலும் இவர்கள் செய்து வரும் தொழிலில் நல்ல லாபத்தை ஈட்ட உள்ளனர். வணிக ரீதியாக இருந்த போட்டியாளர்கள், சூழ்ச்சியாளர்கள், பகைவர்கள் விலகி தொழில் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதன் காரணமாக தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும். புதிய திட்டங்களில் முதலீடுகள் செய்வீர்கள். வீடு, நிலம், சொத்து வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கலாம். புதிய வாகனம் வாங்கும் கனவு நினைவாகும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக மாறும். அலுவலகத்தில் வேலை புரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவை கிடைக்கலாம்.
விநாயகர் சதுர்த்தி நாளில் உருவாகும் லட்சுமி நாராயண யோகம் கும்ப ராசிக்காரர்களுக்கும் நல்ல பலன்களை அளிக்க உள்ளது. இந்த நாளில் கும்ப ராசிக்காரர்களுக்கு ஏற்படும் அனைத்து தடைகளையும் நீக்கி புதிய முயற்சிகளுக்கு விநாயகப் பெருமான் வெற்றியை அளிப்பார். மேலும் லட்சுமி நாராயண ராஜயோகம் செல்வம் மற்றும் செழிப்பு தொடர்பான முயற்சிகளுக்கு கூடுதல் வலுசேர்க்கும். கும்ப ராசிக்காரர்கள் மகாலட்சுமியின் செல்வத்தையும், விஷ்ணுவின் பாதுகாப்பையும் ஒருங்கே பெற உள்ளனர். செல்வம் மற்றும் நிதி ஸ்திரத்தின்மை மேம்படுவதோடு, புதிய தொழில் தொடங்குதல், முதலீடுகள் செய்தல் அல்லது நிதி திட்டமிடல் ஆகியவை வெற்றிகரமாக நடக்கும். மாணவர்கள் படிப்பில் சந்தித்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு வாய்ப்புகள் கைகூடிவரும்.
மகர ராசிக்காரர்களுக்கு விநாயகர் சதுர்த்தி நாளில் உருவாகும் லட்சுமி நாராயண ராஜ யோகத்தால் தொழில் மேம்படும். வேலையில்லாமல் இத்தனை நாட்களாக அவதிப்பட்டு வருபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வணிகத்தை விரிவாக்கம் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். பொருளாதார நிலைமை மேம்படும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலமாக மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரலாம். உங்களின் கடின உழைப்பு மற்றும் புத்திசாலித்தனம் காரணமாக நல்ல பலன்கள் கிடைக்கலாம். குடும்ப உறவுகளிடையே அல்லது கணவன் மனைவி இடையே நிலவி வந்த சிறு சிறு பிரச்சனைகள், பூசல்கள் சரியாகி குடும்பத்தில் மகிழ்ச்சியும், மன அமைதியும் கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் வேத ஜோதிடத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டவை மற்றும் பொதுவான வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டவை. தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து தாக்கங்கள் மாறுபடலாம், எனவே கூடுதல் தகவல்களுக்கு அனுபவமிக்க ஜோதிடரை அணுகவும்)