வேத ஜோதிடத்தில் சுக்கிர பகவான் சுப கிரகமாக அறியப்படுகிறார். இவர் அன்பு, அழகு, செல்வம், இன்பங்கள், பொன், பொருள், வசதி, ஆடம்பரம் ஆகியவற்றின் காரகராக அறியப்படுகிறார். இவர் அக்டோபர் 28 ஆம் தேதி சித்திரை நட்சத்திரத்திற்குள் நுழைய இருக்கிறார். இது முக்கியமான ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகிறது. சித்திரை நட்சத்திரம் கலை, படைப்பாற்றல், அழகு, வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தின் அதிபதியான விஸ்வகர்மாவால் ஆளப்படும் நட்சத்திரமாகும்.
சுக்கிர பகவான் சித்திரை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் பொழுது அதன் பலன்கள் அதிகமாக இருக்கும். கலை, அழகு, காதல் உறவுகள், ஆடை, ஆபரணங்கள், நிதி விஷயங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுக்கிரனின் இந்த நட்சத்திர மாற்றத்தால் பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.