சுக்கிரன் பெயர்ச்சி 2026: இந்த 3 ராசிகளுக்கு 'கஷ்ட காலம்' ஆரம்பம்.. தப்பிக்க இதோ எளிய பரிகாரங்கள்!

Published : May 09, 2026, 11:56 AM IST

Venus Transit 2026: சுக்கிரன் தனது சொந்த நட்சத்திரமான பூராடம் நட்சத்திரத்திற்குள் பெயர்ச்சி அடைந்ததால் 3 ராசிகளுக்கு கஷ்ட காலம் ஆரம்பித்துள்ளது. அவை என்னென்ன ராசிகள்? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்ப்போம்.

PREV
14
நட்சத்திர பெயர்ச்சி அடையும் சுக்கிரன்

ஜோதிட சாஸ்திரங்களின்படி ' இன்பம், செல்வம், காதல் மற்றும் ஆடம்பரத்தின் காரணமாக கருதப்படுபவர். சுக்கிர பகவான். ஒரு ராசியில் சுமார் 1 மாதம் வரை தங்கும் சுக்கிரன், அவ்வப்போது தனது நட்சத்திரத்தையும் மாற்றிக்கொண்டே இருப்பார். அந்த வகையில் சுக்கிரன் தனது சொந்த நட்சத்திரமான 'பூராடம்' நட்சத்திரத்திற்குள் பெயர்ச்சி அடைந்துள்ளார்.

பொதுவாக ஒரு கிரகம் தனது சொந்த நட்சத்திரத்திலேயே பயணம் செய்வது வலுவான பலன்களைத் தரும். ஆனாலும் இப்போதைய கிரக நிலைகளின்படி சில ராசிக்காரர்களுக்கு இந்த மாற்றம் சவாலானதாக அமையக்கூடும். சுக்கிரன் பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகளுக்கு சவாலாக இருக்கும்? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

24
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த நட்சத்திரப் பெயர்ச்சி பொருளாதார ரீதியாகச் சில நெருக்கடிகளை ஏற்படுத்தும். வருமானத்தை விட செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆகவே தேவையில்லாத ஆடம்பரச் செலவுகளை குறைப்பது அவசியம். பணியிடங்களில் சக ஊழியர்களுடன் பேசும்போது நிதானம் தேவை. வேலைச்சுமையால் மன அழுத்தம் ஏற்படக்கூடும். வரவு செலவு கணக்குகளைச் சரியாக திட்டமிட வேண்டும்.

கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. ஏழைகளுக்கு அல்லது ஆதரவற்றவர்களுக்கு உங்களால் முடிந்த அளவு அரிசி அல்லது பால் தானம் செய்வது பணப்புழக்கத்தை சீராக்கும். வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு வெள்ளை நிற மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள்.

34
விருச்சிகம்

சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு உடல்நலம் மற்றும் உறவுகளில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிறிய அளவிலான உடல்நலக் குறைபாடுகள் வந்து நீங்கும். சரியான உணவு முறையைப் பின்பற்றுவது அவசியம். உறவுகளுடன் கனிவான பேச்சை தொடருங்கள். கடுமையான வார்த்தைகள் குடும்பத்தினர் அல்லது நண்பர்களுடனான உறவில் விரிசலை ஏற்படுத்தலாம். 

புதிய தொழில் முயற்சிகள் அல்லது பெரிய அளவிலான முதலீடுகளைச் சில காலத்திற்குத் தள்ளி வைப்பது நன்மை பயக்கும். சர்க்கரை பொங்கல் அல்லது பால் பாயசம் போன்ற இனிப்பு பதார்த்தங்களை தயார் செய்து அக்கம் பக்கத்தினருக்கு வழங்கலாம். இது பேச்சில் கனிவைத் தரும். வெள்ளிக்கிழமை அருகில் உள்ள சிவன் கோவிலுக்குச் சென்று சுக்கிர பகவானுக்கு அகல் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

44
மகரம்

சுக்கிரன் பெயர்ச்சியால் மகர ராசிக்காரர்கள் தங்கள் அன்றாட பணிகளில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.திட்டமிட்ட காரியங்களில் கவனமுடன் இருக்க வேண்டும். முக்கியமான ஆவணங்களில் கையெழுத்திடும் முன் ஒருமுறைக்கு இருமுறை சரிபார்க்கவும். பயணங்களின்போது கவனம் தேவை. வாகனம் ஓட்டும்போது மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 

நீண்ட தூரப் பயணங்களை தவிர்ப்பது நன்றாக இருக்கும். பணியிடங்களில் பொறுமை அவசியம். மேலதிகாரிகளுடன் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். அலுவலகத்தில் அமைதி நிலவ, ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவும் வகையில் பேனா அல்லது நோட்டு புத்தகங்களை வாங்கி கொடுங்கள். பசுக்களுக்கு வெள்ளரிக்காய் அல்லது அகத்திக் கீரை வழங்குவது தடைகளை நீக்கும்.

Read more Photos on
click me!

Recommended Stories