எண்ணியல் படி, ஒருவரின் பிறந்த தேதி அவர்களின் குணாதிசயங்களை, குறிப்பாக ஈகோ மற்றும் சுயமரியாதையை வெளிப்படுத்துகிறது. இவர்களின் ஈகோ காயப்பட்டால், அதை எளிதில் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள். அவர்கள் யாரென்று பார்க்கலாம்.
எண்ணியல் உலகம் மனிதர்களின் குணாதிசயங்களைப் பிறந்த தேதியின் அடிப்படையில் ஆராய்ந்து காட்டும் ஒரு சுவாரஸ்யமான முறையாகப் பார்க்கப்படுகிறது. ஜாதகம் போலவே, பிறந்த நாளின் எண் நம் மனப்பாங்கு, நடத்தை, எதிர்வினை ஆகியவற்றில் ஒரு தனித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று எண்ணியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். குறிப்பாக சில “ரூட் நம்பர்கள்” கொண்டவர்கள், தங்களின் மரியாதை மற்றும் சுயமரியாதையை மிக அதிகமாகக் காக்கும் இயல்புடையவர்களாக இருப்பார்கள்.
25
பிறந்த தேதியும் குணாதிசயமும்
இந்த வகை நபர்களுடன் உறவு பேணும்போது கவனம் அவசியம் என்று எண்ணியல் எச்சரிக்கிறது. ஈகோ காயமடைந்தால், அதை அவர்கள் எளிதில் மறக்க மாட்டார்கள். மன்னிப்பது அவர்களுக்கு கடினமான செயலாக மாறிவிடும். அதனால், இவர்களுடன் பேசும் போது சொற்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும் என்பதே முக்கிய ஆலோசனை.
35
நம்பர் 1
நம்பர் 1 உடையவர்கள், மாதத்தின் 1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்கள். இவர்களுக்கு சூரியனின் ஆதிக்கம் அதிகம் என்று கருதப்படுகிறது. தன்னம்பிக்கை, தலைமைத் திறன், முன்னணி குணம் ஆகியவை இவர்களின் அடையாளம். தங்களின் மரியாதையை மிக உயர்வாகக் கருதுவதால், யாராவது அவமதித்தால் அதை மனதில் பதித்துக் கொள்வார்கள். நேர்மையாகவும் தயக்கமின்றியும் கருத்துகளை வெளிப்படுத்தும் தன்மையும் இவர்களிடம் காணப்படுகிறது.
நம்பர் 8 உடையவர்கள், 8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்கள். சனியின் தாக்கம் காரணமாக இவர்கள் மிகவும் உழைப்பாளிகளாகவும் பொறுப்புணர்வுடன் இருப்பவர்களாகவும் விளங்குவர். அமைதியான தன்மை, ஆழமான சிந்தனை, குறைந்த நண்பர்கள் வட்டம் ஆகியவை இவர்களின் சிறப்புகள். ஆனால் ஒருமுறை மனம் புண்பட்டால், அதை அவர்கள் வாழ்க்கை முழுவதும் மறக்காமல் வைத்துக் கொள்வார்கள்.
55
நம்பர் 9
நம்பர் 9 உடையவர்கள், 9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்கள். செவ்வாய் கிரகத்தின் ஆற்றல் இவர்களை தைரியசாலிகளாகவும் உற்சாகமிக்கவர்களாகவும் ஆக்குகிறது. எந்த சூழ்நிலையையும் நேருக்கு நேர் சந்திக்கும் மனப்பக்குவம் இவர்களுக்கு உண்டு. அவமதிப்பை சகிக்காத இவர்களிடம், யாராவது தவறாக பேசினால் அதற்கு உடனே பதிலடி கொடுப்பார்கள். (குறிப்பு: இந்த தகவல்கள் எண்ணியல் நம்பிக்கைகளின் அடிப்படையில் வழங்கப்பட்டவை.)