நவகிரகங்களில் அழகு, காதல், செல்வம் மற்றும் ஆடம்பரத்தின் காரணியாக விளங்கும் சுக்கிர பகவான், அசுரர்களின் குருவாக போற்றப்படுகிறார். ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியான சுக்கிரன், தற்போது தனது சொந்த ராசியான துலாத்தில் சஞ்சரித்து வருகிறார்.
வரும் அக்டோபர் 19 ஆம் தேதி, துலாம் ராசியில் சுக்கிரன் அஸ்தமனமடைய உள்ளார். சூரியனுக்கு அருகில் வருவதால் ஏற்படும் இந்த அஸ்தமன நிலை சுமார் 10 நாட்கள் நீடித்து, பின்னர் அக்டோபர் 29 ஆம் தேதி மீண்டும் உதயமாகி பலம் பெறுகிறார்.
சுக்கிரனின் இந்த அஸ்தமன மற்றும் உதய மாற்றமானது அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு இது மிகப்பெரிய அளவில் நிதி நன்மைகளையும், தொழில் முன்னேற்றத்தையும் தரப் போகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து விரிவாக காண்போம்.