Venus Combust 2026: அஸ்தமன நிலைக்குச் சென்ற சுக்கிர பகவான்.! செல்வ செழிப்பை பெறப்போகும் 3 ராசிகள்.!

Published : Dec 14, 2025, 11:51 AM IST

Sukra Asthamanam 2026 rasi palangal: புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில் சுக்கிர பகவானின் நிலையில் முக்கிய மாற்றம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் அதிக நன்மைகளை பெற உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
14
அஸ்தமன நிலைக்குச் சென்ற சுக்கிரன்

ஜோதிடத்தின்படி, ஒரு கிரகமானது அவ்வப்போது மறைந்து மீண்டும் உதயமாகும். ஒரு கிரகம் சூரியனுக்கு மிக அருகில் வரும் பொழுது அது அதன் ஒளியானது சூரியனால் மறைக்கப்படுகிறது. இந்த நிலை அஸ்தமனம் என்று அழைக்கப்படுகிறது. ஜோதிடத்தில் முக்கிய கிரகமாக அறியப்படும் சுக்கிர பகவான் டிசம்பர் 11ஆம் தேதி முதல் அஸ்தமன நிலையில் நுழைந்திருக்கிறார். இவர் மீண்டும் பிப்ரவரி 1, 2026 உதயமாக இருக்கிறார். சுக்கிர பகவானின் இந்த நிலை காரணமாக சிலர் சவால்களை சந்திக்க நேரிடும். சிலருக்கு இது நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

24
ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் அஸ்தமனம் மிகவும் சாதகமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் இலக்குகளை அடைய வலுவான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வேலையில் இருப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். வணிகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். திருமண வாழ்க்கையில் பிணைப்பு வலுப்பெறும். முன்பு தடைபட்டு நின்ற வேலைகள் மீண்டும் வேகம் எடுக்கும்.

34
துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு பிப்ரவரி ஒன்றாம் தேதி வரை மிகவும் சாதகமாக இருக்கும். ஆடம்பரத்தின் காரகரான சுக்கிர பகவான் உங்களுக்கு ஆடம்பரத்தையும், பொன், பொருள், வசதிகளையும் வாரி வழங்குவார். குடும்ப உறுப்பினர்களுடன் பிணைப்பு வலுவாகும். அன்புக்குரியவர்களுடன் செலவிடும் நேரம் இனிமையாக மாறும். சமூக தொடர்புகள் விரிவடையும். வேலையில் நேர்மறையான மாற்றங்கள் காணப்படும். நிதிச் சிக்கல்கள் குறையும். கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வணிகப் பயணங்களால் லாபம் கிடைக்கும். தொழில் புதிய திசையில் செல்லும்.

44
மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் அஸ்தமன காலம் மிகவும் நன்மை பயக்கும். இத்தனை நாட்களாக கஷ்டத்தை மட்டுமே அனுபவித்து வந்தவர்கள் இனி நேர்மறையான மாற்றங்களைப் பெறுவீர்கள். கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். நிதி நிலைமை மேம்படும். கடந்த கால முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக மாறும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுப செய்திகளை கேட்பதற்கான அறிகுறிகள் உள்ளன. இந்த நேரத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்கள் எதிர்காலத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories