Panchgrahi Yog 2026: 100 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்று சேரும் 5 கிரகங்கள்.! பஞ்சகிரக யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள்.!

Published : Dec 14, 2025, 10:54 AM IST

Panchagraha Rajyogam in Magara Rasi 2026: சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு ஜனவரி மாதம் அரிய மற்றும் சக்திவாய்ந்த பஞ்சகிரக யோகம் உருவாக இருக்கிறது. இதனால் பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

PREV
16
பஞ்சகிரக யோகம் 2026

வேத ஜோதிடத்தின்படி கிரகங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு அரிய மற்றும் சக்தி வாய்ந்த நிகழ்வாக 5 கிரகங்களின் சேர்க்கை உருவாக இருக்கிறது. 100 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் ஒரு முக்கியமான யோகமாக இது கருதப்படுகிறது. சனி பகவானுக்கு சொந்த வீடான மகர ராசியில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன் ஆகிய ஐந்து கிரகங்கள் இணைய இருக்கின்றன.

26
பஞ்சகிரக யோகம் எப்போது உருவாகிறது?

ஜனவரி 2026 இல் குறிப்பாக ஜனவரி 13 முதல் ஜனவரி 20 வரை 7 நாட்கள் இந்த யோகத்தின் உச்சபட்ச தாக்கம் இருக்கும். ஜோதிடத்தில் 5 கிரகங்கள் இணைவது என்பது மிகவும் சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது. இது பலரின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களையும், புதிய தொடக்கங்களையும் கொண்டு வரும். குறிப்பாக 4 ராசிக்காரர்களுக்கு இது பல வழிகளில் நன்மைகளை அளிக்க உள்ளது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

36
மகரம்

மகர ராசியின் முதல் வீடான லக்ன ஸ்தானத்தில் பஞ்சகிரக யோகம் உருவாக உள்ளது. இந்த யோகம் உங்கள் ராசியிலேயே உருவாவதால் இந்த ஆண்டு முழுவதும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். நீங்கள் எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் ஜாக்பாட் அடித்தது போன்ற பலன்கள் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். எதிர்பாராத அளவிற்கு வருமானம் பெருகும். அதிர்ஷ்டத்தின் உச்சத்தைப் பெறுவீர்கள். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். வீடு அல்லது சொத்துக்கள் வாங்கும் யோகம் கைகூடும்.

46
மேஷம்

மேஷ ராசியின் பத்தாவது வீடான தொழில் ஸ்தானத்தில் பஞ்சகிரக யோகம் உருவாகிறது. எனவே மேஷ ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களின் மதிப்பு உயரும். உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். தாமதமாகி வந்த சம்பள உயர்வு கிடைக்கலாம். புதிய பொறுப்புகளால் மனமகிழ்ச்சி அடைவீர்கள். பணியிடத்தில் இருந்த சவால்களை முறியடிப்பீர்கள். தொழிலில் இருந்த போட்டியாளர்கள், எதிரிகள் விலகுவார்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும்.

56
ரிஷபம்

ரிஷப ராசியின் ஒன்பதாவது வீடான பாக்கிய ஸ்தானத்தில் பஞ்சகிரக யோகம் உருவாகிறது. இது அதிர்ஷ்டம் மற்றும் தந்தையின் இடத்தை குறிக்கும் வீடாகும். எனவே ரிஷப ராசிக்காரர்களுக்கு ஜனவரி மாதம் முழுவதும் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். எதிர்பாராத வழிகளில் இருந்து பண வரவுக்கான வாய்ப்புகள் உண்டு. பணம் வேகமாக சேர்வதால் வங்கி இருப்பு அதிகரிக்கும். வீடு, கார், நிலம் போன்ற சொத்துக்களில் முதலீடு செய்வீர்கள், குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடப்பதற்கான வாய்ப்பு உள்ளது. தந்தை வழி பூர்வீக சொத்துக்கள் அல்லது நிதி ஆதாயங்களைப் பெறலாம். அரசு ஒப்பந்தங்கள் கிடைக்கும். புதிய முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும்.

66
கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு ஐந்தாவது வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பஞ்சகிரக யோகம் உருவாகிறது. எனவே இந்த காலகட்டத்தில் உங்கள் ஆசைகள் ஒவ்வொன்றாக நிறைவேறத் தொடங்கும். உங்கள் குடும்ப உறவுகள் மகிழ்ச்சியாக மாறும். குழந்தைகளுக்கு வரன் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் கிடைக்கலாம். குழந்தைகள் வழியாக மகிழ்ச்சியான செய்திகளைக் கேட்பீர்கள். நீங்கள் செய்திருந்த முதலீடுகள் தற்போது லாபத்தை அளிக்கத் தொடங்கும். உங்கள் கலைத்திறன், படைப்புத்திறன் அதிகரிக்கும். வருமானத்திற்கான புதிய வழிகள் உருவாகும். இதனால் வங்கி இருப்பு கணிசமாக உயரும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Read more Photos on
click me!

Recommended Stories