Vastu Tips: பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கணுமா? வீட்டில் நீங்கள் செய்யக்கூடாத தவறுகள்; வாஸ்து டிப்ஸ்!!

Published : Jul 13, 2024, 10:34 AM IST

நம்முடைய வீட்டில் வைக்கும் பொருட்கள் சரியான திசையில் சரியான இடத்தில் வைத்தால் மட்டுமே நேர்மறையான சக்திகள் அதிகரிக்கும். ஏசி, ஏர்கூலர், ஃப்ரிட்ஜ் போன்ற பொருட்களை சரியான இடத்தில் மட்டுமே வைக்க வேண்டும். தவறான திசையில் தவறான இடத்தில் வைக்கப்படும் பொருட்கள் வாஸ்து குறைபாடுகளை ஏற்படுத்துவதோடு நமக்கு நெகடிவ் எனர்ஜியை அதிகரிக்கும்.  

PREV
16
Vastu Tips: பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கணுமா? வீட்டில் நீங்கள் செய்யக்கூடாத தவறுகள்; வாஸ்து டிப்ஸ்!!
பாசிட்டிவ் எனர்ஜி

வீட்டில் எப்போதுமே நேர்மறை அதிர்வுகள் இருந்தால் மட்டுமே அந்த வீட்டில் சண்டை சச்சரவு இல்லாமல் இருக்கும். பாசிட்டில் எனர்ஜி அதிகம் உள்ள வீட்டில் பண வருமானம் அதிகரிக்கும். கண்டதையும் கண்ட இடத்தில் போட்டு வைக்கக் கூடாது. நம்முடைய வேலை தொழிலில் வெற்றிகள் தேடி வர நாம் சில பொருட்களை சில இடங்களில் மட்டுமே வைக்க வேண்டும். எலக்ட்ரானிக்ஸ் பொருட்களான டிவி, கம்யூட்டர் போன்றவைகளை சில திசைகளில் வைத்தால் மட்டுமே நமக்கு பண வருமானம் வரும். தெரியாமல் சில மூலைகளில் கம்ப்யூட்டரை வைத்தால் அது அடிக்கடி ரிப்பேர் ஆகும்.

26
ப்ரிட்ஜ் வைக்கும் திசை

எலக்ட்ரானிக் பொருட்கள் அத்தனையிலும் ராகுவும் சனியும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். அவற்றை சரியான இடத்திலும், சரியான திசையிலும் வைக்க வேண்டும். சந்திரன், சனி, ராகு மற்றும் புதன். ஜோதிட சாஸ்திரத்தின்படி காற்றின் திசை வடமேற்காகவும், சந்திரனின் திசையும் வடமேற்காகவும் கருதப்படுகிறது, எனவே ஃப்ரிட்ஜ் வைக்கும் போது வடமேற்கு திசையில் வைக்கலாம். வடமேற்கு திசையில் இடமில்லாவிட்டால் கிழக்கு திசை நோக்கி வைக்கலாம். ஃப்ரிட்ஜில் வைக்கும் பொருட்களின் ஆற்றலுக்கு நேர்மறை சக்தி அதிகரிக்கும்.

36
தண்ணீர்  பாத்திரம் வைக்கும் திசை

ஒரு வீட்டில் நல்ல தண்ணீர் கிடைப்பது அதிர்ஷ்டம். இன்றைக்கு தண்ணீர்தான் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி உள்ளது. எனவே நமது
வீட்டின் சமையல் அறையில் வாட்டர் பியூரிஃபையரை கிழக்கு, வடகிழக்கு, அல்லது வடக்கு திசையில் வைக்கலாம். இல்லாவிட்டால் அடிக்கடி அது ரிப்பேர் ஆக வாய்ப்பு உள்ளது. பாத்திரம் கழுவும் சிங்க் வைத்திருப்பதற்கு நேர் மேலே வாட்டர் பியூரிஃபையரை வைக்கலாம். நீர் நிறைந்த குடத்தை நாம் வடகிழக்கில் வைத்தால் அதிர்ஷ்டம் தேடி வரும்.

46
டிவி வைக்கும் திசை

வீட்டின் வரவேற்பு அறையில் பெரிய டிவி இருக்கும் குடும்பத்தோடு அமர்ந்து டிவி பார்ப்பார்கள். சிலர் படுக்கை அறையில் சிறியதாக டிவி வைத்திருப்பார்கள்.  பொதுவாகவே கிழக்கு திசை சுற்றிலோ அல்லது வடக்கு திசை சுவற்றிலோ டிவியை வைக்கலாம்.  இதன் மூலம் நேர்மறை சக்திகள் அதிகரிக்கும். இன்றைக்கு பெரும்பாலோனோர் மொபைலில் அதிக நேரம் மூழ்கியிருப்பதால் படுக்கை அறையில் டிவியை வைக்க விரும்புவதில்லை.

56
கம்யூட்டர் வைக்கும் திசை

இன்றைய சூழ்நிலையில் கம்ப்யூட்டர், லேப்டாப் இல்லாத வீடுகளே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். வீட்டிலோ, அலுவகத்தில் கம்யூட்டரை வைக்க வேண்டிய சரியான திசை பற்றி வாஸ்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. படுக்கை அறையில் தொலைக்காட்சி, கம்யூட்டர் போன்றவைகளை வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் வடகிழக்கு பகுதியில் வைக்கலாம். ஏசி என்பது குளிர்ந்த காற்றினை நமக்கு தரக்கூடியது எனவே வீட்டின் படுக்கை அறையில் வடமேற்கு திசை காற்றின் திசையாக கருதப்படுகிறது. இந்த திசையில் ஏசியை வைத்தால் அதன் ஆயுட்காலம் அதிகரிக்கிறது. வீட்டில் உள்ளவர்களுக்கும் மகிழ்ச்சியை தரும்.

66
ஆபிஸ் வாஸ்து

செய்யும் வேலையில் வெற்றி கிடைக்க வடக்கு திசையில் கம்யூட்டரை வைப்பது நல்லது. எப்போதுமே கிழக்கு, வடக்கு திசை நோக்கி வேலை பார்ப்பது ஆர்வத்தை அதிகரிக்கும்.  ஆன்மீகம், ஜோதிடம் தொடர்புடைய துறையில் இருப்பவர்கள் கம்யூட்டரை தெற்கு திசையில் வைப்பது நல்லது.  இந்த திசை மன நிம்மதியையும் தெளிவான சிந்தனையையும் தரும்.

DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories