ஆடி மாத ராசி பலன் 2024: கடக ராசியில் சூரிய பெயர்ச்சி.. 6 ராசிக்காரர்களுக்கு குபேர யோகம்

First Published | Jul 12, 2024, 2:04 PM IST

தமிழ் மாதங்களில் 4வது மாதம் ஆடி மாதம், இந்த மாதத்தில் சூரியன் கடகம் ராசியில் பயணம் செய்கிறார். ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். கோவில்களில் திருவிழாக்கள் களைகட்டும். தட்சிணாயன புண்ணிய காலம் தொடங்குகிறது. சூரியன் வட திசையில் இருந்து தெற்கு திசை நோக்கி பயணத்தை தொடங்கும் ஆன்மீக மாதமான ஆடி மாதத்தில் கிரகங்களின் கூட்டணி பார்வையால் எந்த ராசிக்காரர்களுக்கு குபேர யோகம் தேடி வரப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்

வேலையில் புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். எல்லா செயல்களிலும் வெற்றி கிடைக்கும்.  படிப்பில் மேன்மை நிலை உண்டாகும், வீடு கட்டும் எண்ணம் நிறைவேறும்.  தொழில் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பொறுமையும் நிதானமும் தேவைப்படும். பிள்ளைகள் நலனுக்காக செலவுகள் அதிகரிக்கும்.  நான்காம் வீட்டில் 3 கிரகங்கள் இணைவதால் திடீர் பண வருமானம் குபேர யோகத்தை தரப்போகிறது.

ரிஷபம்

வேலையில் இட மாற்றம் உண்டாகும், பயணங்களால் நன்மை ஏற்படும்.  தகவல் தொடர்பு சிறப்படையும், மனதில் குதுகலம் உண்டாகும்.  சுப விரைய செலவுகள் அதிகரிக்கும்.  வீட்டை அழகுபடுத்துவீர்கள், சிறு உல்லாசப் பயணம் செல்வீர்கள். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகளை குறைத்து பணத்தை பத்திரப்படுத்துங்கள்.

Tap to resize

மிதுனம்

வேலை செய்யும் இடத்தில் தேவையற்ற வீண் பேச்சுகளை தவிர்க்கவும், திடீர் என்று பணம் கிடைக்கும். நீண்ட நாட்கள் கிடைக்காமல் பாக்கி இருந்த பணம் வசூலாகும், சமயோசிதமாக பேசி காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். திடீர் பண வரவு வந்து திக்குமுக்காட வைக்கும். புரமோசன் கிடைக்கும். உங்களின்  வருமானம் அதிகரிக்கும், பேச்சில் அதிகாரம் தூள் பறக்கும்.
 

கடகம்

வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும், உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.  பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. கோபத்தை கட்டுப்படுத்தவும். உறவினர்களினால் நன்மை உண்டாகும்.   குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். பிள்ளைகளின் படிப்பிற்காக கடன் வாங்கும் நிலை உண்டாகும். வேலை தொழிலில் புதிய முன்னேற்றம் ஏற்படும். உங்கள் ராசியில் சூரியன், சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் கூடியுள்ளதால் மகாலட்சுமி யோகம் தேடி வரப்போகிறது.

சிம்மம்

சூரியன்  உங்கள் ஜென்ம ராசிக்கு  பன்னிரெண்டாமிடத்தில் பயணம் செய்வதால் திடீர் செலவுகள் வந்து போகும். தாய் மாமனுக்காக செலவுகள் செய்ய வேண்டியிருக்கும், ஷேர் மார்க்கெட் முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. செவ்வாய் சுக்கிரன்   உங்கள் ஜென்ம ராசியில் பயணம் செய்வதால் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும். பொழுது போக்கு விஷயங்களில் கவனம் தேவை.  பரம்பரை விவசாய நிலம் கிடைக்கும்.  எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும்.

கன்னி

சூரியன்   லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் காலத்தில் வருமானம் அதிகரிக்கும். மனதில் நினைப்பவை எல்லாம் தடையில்லாமல் நடக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும், வங்கியில் சேமிப்பு உயரும்.  திருமணம் ஆகாதவர்களுக்கு வரன் நிச்சயமாகும். இந்த மாதத்தில் உங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது தேடி வரப்போகும் குபேர யோகத்தை அனுபவிக்கத் தயாராகுங்கள்.
 

துலாம்

புதிய  வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு வேலை கிடைக்கும், தொழில் நிலை சிறப்படையும்.  ஷேர் மார்க்கெட் தொழில் சிறப்படையும், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் முன்னேற்றம் ஏற்படும்.   பெண்கள்  தங்க நகைகள் வாங்குவீர்கள். புதிதாக வீடு கட்டும் யோகம் உண்டாகும். பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் 3 கிரகங்கள் கூட்டணி அமைத்துள்ளதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் உண்டாகும்.

விருச்சிகம்

சூரியன்  ஒன்பதாமிடத்தில்  இருக்கிறார்  தொழில் சிறப்படையும்.  உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும், வியாபாரம் விருத்தியடையும்.  பாக்ய ஸ்தானத்தில் 3 கிரகங்கள் இணைந்துள்ளதால் மகாலட்சுமி யோ

தனுசு

சூரியன்     எட்டாமிடத்தில் இருக்கிறார்  அப்பாவுடன் சச்சரவு செய்ய வேண்டாம், செயல்களில் கவனம் தேவை.    கோபமான பேச்சுகளை தவிர்க்கவும்.  ஷேர் மார்க்கெட் முதலீடுகளில் கவனம் தேவை, யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.   நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும், லாபம் அதிகரிக்கும். சுக்கிரன்     ஒன்பதாமிடத்தில்  இருக்கிறார்     கடவுள் அருள் அதிகரிக்கும் 16ம் தேதிக்குப் பின்னர் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.  குடும்பத்தின் வருமானம் அதிகரிக்கும்.
 

மகரம்

சூரியன்  ஏழாமிடத்தில் இருக்கிறார் சுக்கிரன், புதனோடு இணைந்திருப்பதால்  கூட்டுத் தொழில் சிறப்படையும்.    சில்லறை வியாபாரம் சிறப்படையும், தாய் மாமனால் நன்மை உண்டாகும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள்.   சுப விரைய  செலவுகள் அதிகரிக்கும். பணத்தை சேமிக்கப் பழகுங்கள்.

கும்பம்

சூரியன்    ஆறாமிடத்தில் இருக்கிறார்  புதிய வேலை கிடைக்கும், உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும்.   தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகும், ஷேர் மார்க்கெட் முதலீடுகளை தவிர்க்கவும்.  கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும் விலை உயர்ந்த ஆடை ஆபரணங்களை கவனமாக கையாளவும்.  ஆடி அமாவாசை நாளில் குல தெய்வக் கோயிலுக்கு வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள்.

மீனம்

சூரியன்  ஐந்தாமிடத்தில் புதன், சுக்கிரன் உடன் இணைந்து பயணம் செய்வதால் அப்பாவினால் ஆதாயம் உண்டாகும்.  தரகு கமிஷன் வியாபாரம் சிறப்படையும், ஷேர் மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைக் கொடுக்கும்.  எதிர் பாராத இடத்திலிருந்து பணம் கிடைக்கும். நீங்கள் செய்யும் செயல்கள் Aadi matha rasi palan 2024: Check the rasi palan for the tamil month of aadi prediction for  mesham, rishabam, mithunam, kadagam, simmam, kanni, thulam,viruchigam, dhanusu, makaram, kumbam and  meenam., சொந்தத் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

Latest Videos

click me!