உங்கள் ராசிநாதன் சனியின் பார்வை ராசிக்கு நான்காம் வீடு, எட்டாம் வீடு,பதினொன்றாம் வீடுகளின் மீது விழுவதால் கஷ்டங்களை எளிதாக கடந்து விடலாம். குடும்ப சனியாக இரண்டாம் வீட்டில் சனிபகவான் பயணம் செய்வதால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் வீண் விவாதங்கள் வந்து போகும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பொருளாதார நெருக்கடியால் தேவையற்ற பிரச்சனைகள் வந்து போகும். வேலை செய்யும் இடத்தில் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கலிலும் கவனமும் நிதானமும் தேவை.