அடிக்கடி தவறாக புரிந்துக்கொள்ளப்படும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்.. உங்க ராசி என்ன?

Published : Feb 21, 2024, 05:26 PM IST

சில ராசிக்கார்கள் பெரும்பாலும் மற்றவர்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றனர். அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவில் பார்க்கலாம். 

PREV
16
அடிக்கடி தவறாக புரிந்துக்கொள்ளப்படும் ராசிக்காரர்கள் இவர்கள் தான்.. உங்க ராசி என்ன?

நாம் எப்படிப்பட்டவர், நமது குணநலன்கள் எப்படி இருக்கும் என்பதை நமது ராசி நட்சத்திரங்களை வைத்தே கணிக்க முடியும் என்று நம்பப்படுகிறது. .அந்த வகையில் ஜோதிடத்தின் படி, சில ராசிக்கார்கள் பெரும்பாலும் மற்றவர்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகின்றனர். அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவில் பார்க்கலாம். 

26
For Scorpios 02

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் பொதுவாக மிகவும் சீரியஸான நபர்களாகவும், மர்மமானவர்களாகவும், எளிதில்  உணர்ச்சிவசப்படுபவர்களாக கருதப்படுகின்றனர். இந்த குணாதிசயங்கள் கவர்ச்சிகரமானதாக இருந்தாலும், அவை விருச்சிக ராசிக்காரர்களை பற்றிய தவறான புரிதலுக்கும் பங்களிக்கின்றன. இந்த ராசிக்காரர்களின் உணர்ச்சிகளின் ஆழம், உண்மையான உணர்வுகளை மறைத்து வைத்திருக்கும் போக்கு ஆகியவை காரணமாக மற்றவர்களால் இவர்கள் தவறாக புரிந்து கொள்ளப்படலாம்.

36
Daily Aquarius Horoscope

கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் சுதந்திரமான வாழ்க்கை முறை மற்றும் வழக்கத்திற்கு மாறான அணுகுமுறைக்கு பெயர் பெற்றவர்கள். எனினும் அவர்களிடமுள்ள இந்த கடுமையான தனித்துவம் மற்றவர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும், அச்சுறுத்துவதாகவும் இருக்கும். இந்த ராசிக்காரர்கள் சமூக தொடர்புகளை மதிக்கும் அதே வேளையில், தங்கள் சுதந்திரத்தை விரும்புகிறார்கள் எனவே சில சமயங்களில் சமூக விதிமுறைகளுக்கு இணங்காமல் இருக்கலாம். இதனால் மற்றவர்கள் இவர்களை தவறாக புரிந்து கொள்ளலாம். 

46
Gemini daily horoscope

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் வசீகரம், புத்திசாலித்தனம் ஆகியவற்றுக்கு பெயர் பெற்றவர்கள். ஆனால் இது சில சமயங்களில் மற்றவர்களால் நிலையற்ற தன்மை அல்லது நேர்மையற்ற தன்மை என்று தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது. அவர்களின் மாறிவரும் மனநிலையும் புதிய அனுபவங்களுக்கான ஆர்வமும் மற்றவர்களுக்கு இது தெரியாமல் போகலாம். எனவே மிதுன ராசிக்காரர்களின் நோக்கம் பற்றிய தவறான புரிதலுக்கு வழிவகுக்கும்.

56
horoscope today Capricorn

மகரம் 

மகர ராசிக்காரர்கள் மிகவும் நேர்த்தியாக செயல்களை செய்யும் இயல்புடையவர்கள், மேலும் அவர்கள் வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் மேலாக வெற்றிக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கடின உழைப்புக்கான அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் அவர்களின் இலக்குகளை அடைவது ஆகியவை இவர்களுக்கு முக்கியம். இந்த குணங்கள் காரணமாக மகர ராசிக்காரர்கள் எந்த உணர்ச்சிகளும் அற்றவர்கள் என்று தவறாக புரிந்துகொள்ளப்படலாம்.. இருப்பினும், உண்மையில், அவர்கள் ஆழ்ந்த அக்கறையுடனும் விசுவாசத்துடனும் இருக்கிறார்கள். 

 

66

மீனம் :

மீன ராசிக்காரர்கள் கருணை மற்றும் உள்ளுணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள்.. ஆனால் இந்த உணர்ச்சிபூர்வமான தொடர்பு சில சமயங்களில் மற்றவர்களிடம் மிகவும் பச்சாதாபமாக இருக்கும் இந்த ராசிக்கார்களின் குணத்தால் மற்றவர்களை தவறாக புரிந்து கொள்ள வைக்கும். மேலும், அவர்கள் ஒரு கனவு மற்றும் இலட்சியத் தன்மையைக் கொண்டுள்ளனர்.. ஆனால் சிலர் அவர்களின் இந்த குணத்தையும் தவறாக புரிந்து கொள்வார்கள். 

click me!

Recommended Stories